பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அன்னை கஸ்தூரிபாயின்


செத்தாலும் பரவாயில்லை. ஒருவேளை அவள் விரும்பினால் நீங்கள் அவைகளைக் கொடுக்கலாம்" என்றார்.

”உமது மனைவியின் உடல் சுகம் பெற, அதற்கு நான் மருத்துவம் செய்யும் வரை, எனது முடிவு என்னவோ அதைச் செய்வேன்; எனக்கு அந்த உரிமை உண்டு. இதற்கு நீர் உடன்படாவிட்டால் உமது மனைவியை இங்கிருந்து அழைத்துச் செல்லலாம். எனது மருத்துவ சிகிச்சையில் ஓர் உயிர் இறப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினார் டாக்டர்.

”அப்படியானால் நோயாளியை இங்கிருந்து அழைத்துச் செல் என்கிறீர்களா?” என்று காந்தி டாக்டரைக் கேட்டார்.

"நானா அழைத்துச் செல்லுங்கள் என்கிறேன். நீங்கள் நான் சொல்வதற்குச் சம்மதித்தால் நானும் எனது மனைவியும் எங்களால் முடிந்ததைப் பொறுப்புடன் செய்வோம். பிறகு, நோயாளியைப் பற்றிய கவலையே இல்லாமல் நீங்கள் போங்கள். இந்தச் சிறிய விஷயங்கள் கூட உங்களுக்குப் புரியவில்லையே! உமது மனைவியை எனது வீட்டிலே இருந்து அழைத்துப் போங்கள் என்று நான் கூறும் அளவுக்கு, நான் உங்களைக் கேட்டுக் கொள்ளுமாறு தூண்டுவது யார்? நீங்கள்தானே!" என்றார் டாக்டர்.

அப்போது உடன் இருந்த காந்தியின் மகன், தந்தையின் கருத்தை ஆதரித்தான். "தாயாருக்கு எக் காரணம் கொண்டும் மாட்டிறைச்சி சூப் கொடுக்கக் கூடாது" என்றான்.

இதற்குப் பிறகு காந்தி, மனைவியின் கருத்தறிய கஸ்தூரிபாயிடம் சென்று, தனக்கும் டாக்டருக்கும் நடந்த வாக்கு வாதத்தைக் கூறினார்.

அதற்கு கஸ்தூரிபாய், "என்ன மாட்டிறைச்சியா? அதன் ரசமா? பருகமாட்டேன். மாட்டின் உடலை வெட்டித்