பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

31


துண்டாக்கிய அந்தப் புலால், மாட்டின் உடலிலுள்ள புண்தானே அந்தப் புண்ணிலே வடிக்கப்பட்ட புலால் ரசத்தை நான் குடிக்க மாட்டேன். உலகத்தில் மனிதப் பிறவியே பெறுவதற்கரிய உன்னதமான பிறவி. இந்த மாதிரிப் பிற உயிர்களைக் கொன்று அதன் புண்களிலே வடித்து எடுக்கப்பட்ட ரசத்தைக் குடித்து எனது உடம்பைக் கறைப்படுத்திக் கொள்ள மாட்டேன். இதைவிட என் உயிர் எனது கணவன் அரவணைப்பிலே பிரிவதே மேல்” என்றார்.

டாக்டர் கூறிய, அக்கறை மிகுந்த வாதங்களைக் காந்தியும்-கஸ்தூரிபாயிடம் வலியுறுத்தினார். எல்லா விஷயங்களிலும் மனைவி கணவனைப் பின்பற்றியாக வேண்டிய அவசியமில்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மதுவையும், புலாலையும் நண்பர்கள் உண்பதைக் காந்தி தனது மனைவிக்கு எடுத்துரைத்தார்.

ஆனால், ”புலால் ரசம் என்ற பிற உயிரின் ரசத்தைக் கண்டிப்பாக அருந்தமாட்டேன் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார் கஸ்தூரிபாய். உடனே என்னை டாக்டரிடம் இருந்து அழைத்துச்செல்லுங்கள்” என்றும் வேண்டினார் அவர்.

காந்தி, கஸ்தூரி பாய் கருத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். மனைவியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பி டாக்டரிடம் அனுமதி பெற்றார். டாக்டர் ”காந்தி உணர்ச்சியற்ற ஒரு கல்நெஞ்சர்” என்று வருத்தப் பட்டார்.

மழை தூறிக் கொண்டிருந்தபோதே, தனது மனைவியைக் குண்டுக் கட்டாகத் தூக்கி ரிக்க்ஷாவில் ஏற்றிக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று விட்டார். போகும் வழியில் தனது கணவரிடம் கஸ்தூரிபாய் எனக்கு ஒன்றும் இல்லைங்க. நீங்கள் கவலைப்பட வேண்டாம்! என்றார்.

எலும்பும் தோலுமாக இருந்த கஸ்தூரி பாயைக் காந்தி தனது இரு கைகளால் தூக்கிச் சுமந்து கொண்டு ரயிலேறி