பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அன்னை கஸ்தூரிபாயின்இத்தகைய ஃபினிக்ஸ் செட்டில்மெண்ட் ஆசிரமத்திற்கு அன்னை கஸ்தூரிபாய்தான் தலைவியாக இருந்துகொண்டு எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டார். அங்கே தென்னாப்பிரிக்காவின் பல முக்கிய தலைவர்களும், பெரியோர்களும் ஆசிரமத்திற்குள் வந்து குடியேறினார்கள். எழுத்து வாசனையும் படிப்பறிவும் இல்லாத அன்னை இந்த ஆசிரமத்திலேதான் தனது எண்ணங்களை ஆங்கில மொழியிலே வெளிப்படுத்தப் பயிற்சி பெற்றார்.

மறுபடியும் ரத்தப்போக்கு நோய் அன்னையைப் பற்றி வாட்டி வதைத்தது. எளிதில் அந்த நோய் குணமடைவதாகத் தெரியவில்லை. எந்த மருந்தாலும் அவரது வியாதி சுகமடையவில்லை.

இதனைக் கண்டு மனம் நொந்த காந்தியடிகள், இயற்கை மருத்துவமான ஜல சிகிச்சையாலும் அந்நோய் தீராததால், நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, தனது மனைவி உண்ணும் உணவில் உப்பையும், மசாலாவையும் நீக்கி விட்டார். இந்த ரத்தப் போக்கு நோய் குணமாகலாம் என்று உணர்ந்து, இதனால் இரண்டையும் விட்டுவிடும்படி தனது மனைவியை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், கஸ்தூரிபாய் இந்த கெஞ்சுதல் நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டார். பலவீனமான உடம்பில் விரைவில் கோபம் கொப்பளித்து வருவது இயற்கை அல்லவா?

அதனால் அவர் கணவன் மீது கோபப்பட்டார். ”வைத்தியர் ஒருவர் உம்மைப் பார்த்து உப்பையும் மசாலாவையும் கைவிட்டு விடுங்கள் என்று யோசனை கூறினால் விட்டு விடுவீர்களா?” என்று தனது கணவனைத் திருப்பிக் கேட்டு விட்டார்.

காந்தியடிகளுக்கு அதைக் கேட்டதும் மனைவி மீது ஓர் அனுதாபம் ஏற்பட்டது. இருப்பினும் வருத்தத்துடன்