உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அன்னை கஸ்தூரிபாயின்


உடலும் முழுமையான குணமடையும். அவற்றை விலக்க விலக்க உனக்கு நன்மைதான்; சந்தேகமே இல்லை.

"ஆனால், நான் செய்த சபதத்தை என்னால் மாற்றிக் கொள்ள இயலாது. அதனால் எனக்கும் தான் நன்மை. புலன் அடக்கத்திற்கு உதவும் எதுவும் நன்மைகளைத்தான் தரும். எனக்கு இது ஒரு சோதனையாகவும், உனக்கு உன் தீர்மானத்தை நிறைவேற்றும் அறத்தின் வலிமையாகவும் இருக்கட்டுமே!” என்றார் அடிகள்.

கணவரைத் மாற்ற முடியாது என்றுணர்ந்த கஸ்தூரிபாய், ”நீங்கள் பிடிவாதக்காரர், யார் சொன்னாலும் கேட்க மாட்டீர்கள்” என்றார், வருத்தமும் சோகமும் கலந்த குரலோடு:

உப்பையும், மசாலாப் பொருட்களையும் அறவே நீக்கி விட்ட அன்னைக்கு, விரைவிலே ரத்தப்போக்கு நின்றது. சாகும்வரை அவருக்கு அந்த நோய் வரவே இல்லை.

ஏற்கனவே, பாமரவைத்தியன் என்ற பெயரைப் பெற்றிருந்த காந்தியடிகளாருக்கு, அன்னையின் ரத்தப் போக்குத் தடுப்பு மேலும் ஒரு புகழைத் தேடித் தந்து விட்டது.

xxx