பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலனடக்கம்



னது மனைவியிடம் உண்மையாக நடப்பதை, ஒழுக்கமாக இருப்பதை, அவ்வாறு வாழ்வதை சத்தியத்தின் ஒரு பகுதியாகவே காந்தி நம்பினார்! வாழ்ந்தும் காட்டினார்!

காந்தியடிகள், அன்னை கஸ்தூரிபாய் இருவருக்கும் இறுதியாகப் பிறந்த குழந்தைதான் தேவதாஸ் காந்தி என்பவர். எதிர்பாரா நேரத்தில் தேவதாஸ் பிறக்க கஸ்தூரி பாய்க்கு பிரசவ வேதனை உண்டானது.

அந்த இக்கட்டான நேரத்தில் பிரசவம் பார்க்க எந்த மருத்துவரும் அங்கே திடீரெனக் கிடைக்கவில்லை- போய் அழைத்து வரவும் நேரமில்லை. அதனால், காந்தியே மனைவியுடன் இருந்து பிரசவத்தைக் கவனித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு காந்தியடிகளாராலேயே பிரசவம் பார்க்கப்பட்டவர்தான் இந்தியாவின் இறுதி கவர்னர் ஜெனரலான சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியாரின் மகள் லட்சுமியைத் திருமணம் செய்து கொண்ட தேவதாஸ் காந்தி.

இந்தக் குழந்தை பிறந்ததற்குப் பிறகுதான் காந்தி தன்னையே மிகக் கடுமையான சோதனைகளிலே ஈடுபடுத்திக் கொண்டார்.

ஒரு மனிதன் தன்னைப் புலனடக்கம் செய்து, ஆசைகளை அடக்கவேண்டும். அப்படி அடக்கி வெற்றி பெறாதவனால் மனப் பூர்வமான மக்கட் தொண்டு செய்ய முடியாது என்பது காந்தியமாகும்.

இதே கருத்தைத்தான் பிளேட்டோ என்ற சிந்தனையாளர் தனது குடியரசு நூலில் கூறும்போது, மனித இனத்தை