38
அன்னை கஸ்தூரிபாயின்
மூன்றாகப் பிரித்து முதல் தர மனிதனை தங்க மனிதன் (Golden Man) என்றார். இந்த மனிதனைத்தான் காந்தியடிகள் இங்கே நினைவுகூர்ந்து, அவரது ஆன்மிகம் கலந்த சிந்தனைக்கு பிரம்மச்சரியம் என்று பெயர் சூட்டுகிறார். இவர்கள்தான் ஆட்சியிலும், பொதுத் தொண்டிலும் அமரவேண்டும் என்கிறார் பிளேட்டோ.
இரண்டாவது தரத்திற்குரிய மனிதன் வெள்ளி மனிதன் அதாவது {Siver Man) என்கிறார். இவர்கள் கல்வி, அறிவியல் வரலாற்றுத் துறைகளில் மேன்மைகளை உருவாக்கும் திறன் உடையவர்களாக நாட்டுக்கு நன்மையாக விளங்குவார்கள் என்கிறார்.
மூன்றாவது தரத்திற்குரிய மனிதனை Iron Man அதாவது இரும்பு மனிதன் என்கிறார். இவனுடைய உழைப்புத்தான் மக்களது வாழ்வுக்கும் வளமைக்கும் உபயோகமான உழைப்பாக உயரும் எனகிறார்! அவனால்தான் அந்த நாடு வளமும் நலமும் பெறும் என்று அறுதியிட்டு உரைக்கின்றார்.
இந்த மூன்று மனிதர்களில் முதல் ரகம்தான் பிரம்மச் சரியம் பேண வேண்டும் என்ற காந்திய முறையாகும்!
காந்தி தென்னாப்பிரிக்காவில் 1906ஆம் ஆண்டு ஆசிரம வாழ்க்கையின் போதே இந்த பிரம்மச்சரிய முடிவுக்கு வந்து, தனது வாழ்நாள் முழுவதும் அந்த விரதத்தை மேற் கொண்டார்.
”பொதுநலவாழ்க்கையில் மக்கள் சேவை செய்ய நினைப்போர் அல்லது செய்து கொண்டிருப்போர் இந்த பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் குரங்குபோல குறும்புசெய்து அங்குமிங்கும் தாவிக் கொண்டிருக்கும் மனத்தையும், ஆத்மாவையும் ஈடுபடுத்தி மக்கட் தொண்டு செய்ய முடியாது என்பதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.