பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

34
கஸ்துரரிபாயின் வீர உரையை ஏற்று நடப்போம் என்ற உணர்ச்சியோடு மற்ற போராட்ட வீராங்கனைகள் கையொலி எழுப்பி, கஸ்தூரிபாயின் வீர மொழிகளை ஆமோதித்தார்கள்.

பெண்கள் போராட்டக் குழுவில் சம்மதம் தெரிவித்தபடியே, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து அறப்போர் செய்து சிறை புகுந்தார்கள். இந்தப் போராட்டத்தை தென்னாப்பிரிக்க இந்தியர்கள் காந்தியடிகள் தலைமையிலும், கஸ்தூரிபாய் தலைமையிலும் ஏறக்குறைய ஆறு ஆண்டுக் காலமாகத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள். ஆண்களும் பெண்களும், விக்ரமாதித்தன் என்ற மன்னன் காடாறு மாதம், நாடாறுமாதம் ஆட்சி நடத்தியதைப் போல, வீடாறுமாதம் சிறை ஆறுமாதம் என்று போராடி இறுதியிலே வெற்றி பெற்றார்கள்.

காந்தியடிகளோடு ஃபீனிக்ஸ் செட்டில்மெண்டில் வசித்த நண்பர்களில் சிலர் மட்டுமே, சிறைத் தண்டனைக்குப் பயந்து போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று பின்வாங்கி விட்டார்கள்.

நண்பர்கள் சிலரின் இந்தத் தவறுக்கு தன்னுடைய பலவீனமே காரணம் என்று கருதினாரே தவிர, பின்வாங்கிச் சென்றவர்களை அவர் குறை கூறவில்லை. அந்தப் பலவீனத்திற்குத் தண்டனையாக, பதினான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து காந்தியடிகள் தன்னைத் தானே வகுத்திக் கொண்டார்.

இந்தப் பதினான்கு நாள் உண்ணாவிரதத்தின்போது கஸ்தூரிபாய் தனது கணவர் காந்தியடிகளுக்குரிய பணி விடைகளைச் செய்து கொண்டு அதே நேரத்தில் போராட்ட வீரர்களுடனும் வீராங்கனைகளுடனும் ஒன்று சேர்ந்து