பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அன்னை கஸ்தூரிபாயின்


அந்தப் போராட்டத்தின் வெற்றிக்காக அல்லும் பகலுமாக உழைத்து வந்தார்.

இறுதியில் தென்னாப்பிரிக்க இந்தியரின் அறப்போர் வெற்றி பெற்ற பின்பு, ஆங்கிலேயர் ஆட்சி இந்தியர்களுக்குரிய நீதியை வழங்கியது. இதன் எதிரொலியாக, இந்திய மக்களுக்கு விரோதமான நிறவெறிச் சட்டங்களை அந்த ஆட்சி திரும்பப் பெற்றுக் கொண்டது.

காந்தியடிகளும் அதற்குப் பிறகு தனது அறப்போர் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார் பிறகு தனது தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்ப முடிவு செய்தார்.