பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அன்னை கஸ்தூரிபாயின்



பாராட்டு விழா முடிந்தது! வீட்டுக்கு வந்தார் காந்தியடிகள்! அன்று இரவு முழுவதும் அவருக்கு நித்திரை வரவில்லை. காரணம், மக்களுக்குத் தொண்டு செய்வது பிறப்பெடுத்ததன் கடமை! அந்தத் தொண்டுக்கு அன்பளிப்பாக இந்தப் பரிசுப் பொருட்களை மக்கள் வழங்கினார்களா அல்லது தொண்டு செய்ததற்கு இவை கூலியா? என்று சிந்தனை செய்தவாறே இருந்ததால் அவருக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை.

தொண்டர்கள் மக்களிடம் செய்த தொண்டுகளுக்காகப் பரிசு வாங்கலாமா? அவ்வாறு வாங்கினால் தொண்டு என்பதே பொருளற்றுப் போகாதா? தங்களுக்குக் கிடைத்த பரிசுகளைத் தொண்டர்கள் தனது சொந்தத்துக்கு உரிமையாக்கிக் கொள்ளலாமா? என்ற நோக்கம் காந்தியடிகளது மனத்தைக் குத்திக் குடைந்து கொண்டிருந்தன.

இறுதியாக, தங்களது தொண்டுகளுக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களைத் தங்களது சொந்த உரிமைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று முடிவுக்கு வந்தார்.

தொண்டர்கள் அன்போடு கொடுத்த பரிசுகளை அவர்களிடமே திருப்பித் தருவதும் தவறு. தந்தவர்கள் மனது புண்படுமே! எனவே, கொடுக்கப்பட்ட பரிசுகளைத் தான் அனுபவிக்காமல் அவற்றைப் பொது நன்மைகளுக்குப் பயன்படுத்துவது தான் நியாயம் என்றும் தீர்மானித்தார்.

இதைப் பற்றி தனது மனைவியிடமும் கலந்து பேசினார். ஏனென்றால், கஸ்தூரிபாய்க்கும் சில பரிசுப் பொருட்கள் வந்துள்ளனவே! அதனால் மனைவி கருத்தையும் தெரிந்து