52
அன்னை கஸ்தூரிபாயின்
"சபர்மதியில் ஆசிரமம் அமைக்கப்பட்ட நேரத்தில், ஹரிஜனக் குடும்பம் ஒன்று அங்கு வந்து சேர்ந்தது. அந்தக் குடும்பத்தையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் காந்தியடிகள் அப்போது ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அதற்குப் பெரும் எதிர்ப்பு எழுந்தது. ஆசிரமத்திற்கு யார் யார் பண உதவிகளைச் செய்தார்களோ அவர்கள், தங்களது உதவிகளை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால், காந்தியடிகள் அதையெல்லாம் ஒருவாறு சமாளித்துக் கொண்டார். ஆசிரமத்துக்குள் எழுந்த கலவரங்களை ஆனால் அடக்குவது கஷ்டமாகவே இருந்தது.
"அன்னை கஸ்தூரிபாய் தாழ்த்தப்பட்ட ஹரி ஜனங்களை ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார். மற்றும் சில ஆசிரமப் பெண்களுக்கும் இது திருப்தியளிக்கவில்லை. ஹரிஜனங்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இது ஆசிரம விதிகளுள் ஒன்று என்பதைக் கலவரமடைந்தவர்களுக்கு காந்தியடிகள் விளக்கிப் புரிய வைக்க இயலவில்லை. அதனால் மக்களிலே பலர் ஆசிரமத்தைப் புறக்கணித்ததால், ஆசிரம வாழ்க்கை மிகவும் பாதித்து விட்டது.
"அதே நேரத்தில் ஆசிரமத் தலைவியான கஸ்தூரிபாயும் ஹரிஜன எதிர்ப்பு எழுப்புவதைப் பார்த்து காந்தியடிகள் மிகவும் கவலையடைந்தார். அதனால் அவர் ஆசிரமத்துக்கு உள்ளேயே ஏழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் என்பது கஸ்தூரிபாய்க்கு மட்டும்தான் தெரியும்.
"ஏழு நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தபோதுதான்,கஸ்தூரிபாய்க்கு அந்த ஆசிரமத்தின் அடிப்படைத் தத்துவம் சரியாகப் புரிந்தது. தீண்டத் தகாதவர்கள் என்று மக்களுள் ஒரு