பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அன்னை கஸ்தூரிபாயின்


மாநிலத்தைச் சேர்ந்த அந்த மக்கள் பேசும் குஜராத் மொழி கூட கஸ்துரிபாய்க்குச் சரியாகத் தெரியாது. இருந்தாலும், தனக்குத் தெரிந்த அளவில் அந்த மொழியைக் கொண்டே அவர்களுடன் பழகி, அவர்களுக்குக்குரிய ஒழுங்குகளை அவர் போதித்தார்.

சம்ப்ரான் பகுதியிலே உள்ள ஒவ்வொரு கிராமத்திலுள்ள வீடுகளுக்கும் தவறாது செல்வார். "கிராமப் பெண்கள் தினந்தோறும் குளிக்க வேண்டும். துணிகளைச் சுத்தமாகத் துவைத்து அணிய வேண்டும்; வீடுகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டுமல்ல, வீட்டின் சுற்றுப் புறங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று பள்ளிப் பாடங்களைப் போல அவர்களுக்குப் போதித்தார்.

உடனே அந்தப் பெண்கள், "அம்மா எங்களிடம் இருப்பது ஒரே ஒரு புடவை. அதைத் துவைத்துக் கட்டிக் கொள்வது எப்படி? காந்தியடிகளிடம் சொல்லி, எங்களுக்கு ஒரு மாற்றுச் சேலை வாங்கிக் கொடுங்கள். நாங்கள்.தினந்தோறும் குளித்துவிட்டுச் சுத்தமான சேலைகளைக் கட்டிக் கொள்கிறோம்" என்றார்கள்.

வறுமையிலே வாடும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் அன்னையின் மனத்தைப் பக்குவப்படுத்தியது. அவர்கள் மீது மேலும் கருணை பிறந்தது. அப்போதுதான் காந்தியடிகளது மக்கள் சேவையின் உட்பொருள் அன்னைக்குத் தெளிவாகப் புரிந்தது.

வறுமையான ஒரு குடும்பத்தின் கஷ்டங்களைத் தீர்த்து வைப்பதைக் காட்டிலும், வறுமை பெருகிய ஒரு நாட்டின் கஷ்டத்தைத் தீர்ப்பது தான் பெரிய தொண்டு என்பதை அவர் நன்றாக அப்போது தெரிந்து கொண்டார். அதற்குப்