பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

572. பெண்மணிகள் அனைவரும் நூல் நூற்கும் ராட்டினம் என்ற சர்க்காவில் நூல் நூற்பதை ஒரு வைக்கிராக்கிய நோன்பு போல நினைத்துப் பின்பற்ற வேண்டும். மற்ற மக்களையும் மேற்கண்டவாறு செய்திடத் தூண்ட வேண்டும்.

3. வியாபாரிகள் எல்லாரும் வெளி நாட்டுத் துணிகளை விற்பனை செய்யக் கூடாது.

மகாத்மாவின் ஆணைகளை எவ்வளவு உண்மையாக இந்த அறிக்கை எதிரொலிக்கின்றது என்பதை மக்கள் உணர்ந்து கஸ்துரி பாயின் தேசப் பற்றை எல்லாரும் வரவேற்றனர். காங்கிரஸ் இயக்கத்தை மேலும் வலுவாக வளர்த்திடும் முயற்சியை அந்த அறிக்கை மக்களிடையே ஏற்படுத்தியது என்று கூறலாம்.

xxx