பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜ்கோட் சமஸ்தானப் போர்!
கஸ்துரி பாய் கைது!

1924-ஆம் ஆண்டு, இருபத்தொரு நாட்கள் உண்ணா விரதப் போர் நடந்தது. இந்தப் போராட்டம் இந்தியாவையே குலுக்கி உலுக்கிற்று! அன்னை கஸ்தூரிபாய்க்கு அடி வயிற்றில் நெருப்பு!

ஆம், மேற்கண்ட ஆண்டில் மகாத்மா காந்தியடிகள், இந்தியத் தலை நகரமான புதுடில்லியில் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக, இருபத்தொரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அறப்போரைத் துவக்கினார். இந்தப் போராட்டத்தினால், தனது கணவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்று கலங்கினார்.

நடப்பது நடக்கட்டும் என்ற பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு, கஸ்தூரி பாய், தனது கணவர் அருகே அமர்ந்து அவருக்குரிய உண்ணாவிரதப் போர்ப் பணிகளைச் செய்தபடியே இருந்தார்!

இந்திய விடுதலைக்காக, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து காந்தியடிகள் அந்த உண்ணாவிரத்தின் மூலமாகத் தன்னைத்தானே வருத்திக் கொண்டார். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்ற மகாத்மாவுடன், கணவருக்காக அன்னை யும் துன்பங்களை ஏற்றார்!

1932-ஆம் அண்டு பர்தோலி நகரில் ஒரு போராட்டம்! அந்த அறப்போரில் அன்னை 'கஸ்தூரிபாயும் கலந்து