பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்னை கஸ்தூரிபாயின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண்!

"வ்வொரு பிரபலமான, வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்னால், நிச்சயமாக ஒரு பெண் இருப்பாள்" என்பது ஆங்கிலப் பழமொழி!

"தாய்க்குப் பின் தாரம்", "இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை.” என்பவை எல்லாம் தமிழ்நாட்டுப் பழமொழிகள்!

ஏறுக்கு மாறாக மனைவி அமைந்தால், அவன் சந்தியாசம் பெறுவதே நல்லது என்று அவ்வைப் பெருமாட்டி கூறியுள்ளார்.

திருவள்ளுவர் பெருமான், மனைவியை, மனைவி என்ற வார்த்தையால் சுட்டிக் காட்டாமல், வாழ்க்கைத் துணை என்றும் கூறாமல், வாழ்க்கையிலே துணையாக நின்று அவனது எல்லாச் செயல்களிலும் நன்மை புரிபவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மனைவி என்பவளை "வாழ்க்கைத் துணை நலம்' என்று குறிப்பிட்டது சிந்தனைக்குரியதாகும்.

நமது அண்ணல் மகாத்மா காந்தியடிகளது வெற்றிக்கும், புகழுக்கும் பின்னால் அன்னை கஸ்தூரிபாய் அற்புதமான ஒரு வாழ்க்கைத் துணை நலமாக வாழ்ந்து காட்டினார் என்பது