உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அன்னை கஸ்துரிபாயின்


உணரவில்லையா? அவரோ, உனக்கு இன்றும் அன்பையே வழங்குகிறார். ஒழுக்கத் தூய்மைக்கு அவர் தருகிற மரியாதை என்ன என்று உனக்குத் தெரியும். ஆனால், அவருடைய அறிவுரைகளை எல்லாம் நீ அலட்சியம் செய்து விட்டாய். ஆயினும் அவர் உன்னைத் தம்மோடு வைத்துக் கொண்டார்; உணவும் உடையும் அளித்தார்; நீ, நோயுற்ற போது பணிவிடைகளும் புரிந்தார்.

"அவருக்கு இந்த உலகத்தில் தான் எத்தனை பொறுப்புக்கள்! அவர் உனக்குச் செய்தது அதிகம். அவர் விதியை எண்ணித்தான் வருந்த முடியும். பகவான் அவருக்கு மாபெரும் ஆன்ம சக்தி அளித்துள்ளார். அவர் இந்த உலகத்தில் நிறைவேற்றி வந்திருக்கும் கடமைகளைச் செய்து முடிக்க ஆண்டவன் தான் அவருக்கு ஆயுளும் உடல் வலிமையும் தரவேண்டும். நான் அபலை. உன்னுடைய அடாவடித் தனத்தை என்னால் தாங்க முடியவில்லை.

"உன்னுடைய தீய ஒழுக்கம் பற்றிப் பலர் உனது தந்தையாருக்குக் கடிதம் எழுதுகின்றனர். உன்னால் உண்டாகும் அவமானங்களை எல்லாம் அவர் ஏற்க வேண்டியுள்ளது. ஆனால், என் அவமான உணர்ச்சியை எங்கு மறைப்பது? நண்பர்களுக்கும் அறிமுகமில்லாதவர்களுக்கும் இடையில் நான் நிமிர முடியாதபடி செய்து விட்டாய் உனது செயல்கள் அவ்வளவு வெட்கக் கேடாக உள்ளன. உன் தந்தையார் உன்னை மன்னிப்பார்! கடவுள் உன்னை மன்னிக்கவே மாட்டார்.

"சென்னையில், ஒரு பிரமுகர் வீட்டில் விருந்தாளியாக இருந்து, அங்கு தவறான காரியங்கள் செய்து விட்டு, ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி விட்டாயாம்! உனது செயலைக் கண்டு அந்தப் பிரமுகர்