64
அன்னை கஸ்துரிபாயின்
நம்பினேன். ஆனால், அந்த நம்பிக்கையும் உடைந்து விட்டது.
"உன்னுடைய நடத்தையால் உன் பிள்ளை எவ்வளவு துயரப்படுகிறான் என்பதை நீ அறிவாயா? உன் நடத்தையால் ஏற்பட்ட சோகச் சுமையை உன் பெண்களும், மருமகளும் மிகவும் கஷ்டப்பட்டுச் சுமக்கிறார்கள்."
ஹீராலுக்கு இவ்வாறு கடிதம் எழுதிய அன்னை கஸ்தூரிபாய், ஹீராலாலின் முகமதிய நண்பர்களுக்கும் பத்திரிகை வாயிலாக ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை விவரம் வருமாறு:
"என்மகன் சமீபத்தில் செய்த காரியங்களுக்கு உதவி புரிந்தவர்களுக்குத்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உங்கள் செயலும், மனப்போக்கும் எனக்கு விளங்கவில்லை. சிந்தனையில் சிறந்த முஸ்லிம் பெரியோர்களும், எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு நண்பர்களாக இருந்த முஸ்லிம்களும், என் மகன் செய்ததைச் சற்றும் ஏற்கவில்லை என்பதைதான் அறிவேன். அதற்காக, நான் மகிழ்கிறேன். மத மாற்றத்தால் என் பிள்ளை உயரவில்லை. இன்னும் இழி செயல்களிலே ஆழ்ந்து விட்டான். ஆனால், உங்கள் மதத்தைச் சார்ந்த சிலர், அவனுக்கு 'மெளல்வி' என்று பட்டம் சூட்டவும் முனைந்துவிட்டார்கள். இது உங்களுக்கு நீதியா என்று கேட்கிறேன். என் மகனைப் போன்ற ஒழுக்கம் கெட்டவர்களுக்கு 'மெளல்வி' பட்டம் சூட்ட உங்கள் மதம் சம்மதிக்கிறதா?
"ஆணேறு என்று அவனைத் தட்டிக் கொடுத்து, நீங்கள் கண்ட ஆனந்தம் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவனுடைய நன்மைக்காக இவ்வாறு செய்கிறீர்கள் என்றும் என்னால் நம்ப முடியவில்லை. எங்களை இழிவு செய்ய