பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

73


அதிகாரிகள் சிறைவைத்திருந்தார்கள். அதே இடத்திற்கு கஸ்தூரிபாயையும் அழைத்துச் சென்று அவர்கள் சிறை வைத்தார்கள்.

அன்னையின் உடல் நலம் ஏற்கனவே மிகவும் பலவீனம் பெற்றிருந்தது. அடிகளுடனே சிறை வைக்கப்பட்டதால் அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்த நேரத்தில், மகாத்மாவின் நேர்முகச் செயலாளராகவும், அவரது மகனைப்போன்று நம்பிக்கையுடன் உழைத்த வரும், தேசிய காங்கிரசின் செயல் வீரராக விளங்கியவரும், கர்ந்தியடிகளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தவருமான மகாதேவதேசாய் என்பவர் மரணமடைந்து விட்டார். இவர் மகாத்மாவுக்கு சேவை செய்தவாறே தாம் இறக்கவேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தவர். அவர் இறப்பு காந்தியடிகளை உலுக்கிவிட்டது. சோகமே உருவானார் அடிகள்.

"மகனே! மகாதேவ தேசாய் செல்வமே; என்னை விட்டு விட்டு எங்கேயடா சென்றாய்?" என்று கஸ்தூரிபாய் கதறி அழுதார்!

ஆனால் காந்தியடிகள், துக்கத்தை அடக்கிக் கொண்டு ஆறுதலடைந்தவராய், காங்கிரஸ் தொண்டர்களைக் கைது செய்த ஆணவ ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இருபத்தொரு நாள் உண்ணாவிரதப்போரைத் துவக்கி விட்டார். அதை ஆண்டவன் கட்டளை என்று மனைவியிடம் கூறிவிட்டார்.

தேசாய் மறைந்த துக்கம் தாளவில்லையே என்று கஸ்தூரிபாய் அழுது கண்ணீர்விட்டார். இருந்தாலும் கணவனை மாற்ற முடியாது; அவர் அறிவித்தால் அறிவித்ததுதான் என்று ஆண்டவனைத் தொழுதுகொண்டு,