பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அன்னை கஸ்துரிபாயின்


தேசத்துக்காகக் கணவன் தொடங்கிய போராட்ட வேள்வி வெற்றி பெற்றிட கடவுளை வேண்டினார்.

காந்தியடிகளின் படுக்கையைச் சுற்றிச் சுற்றி அந்த மெலிந்த உடல் வலம் வந்து பணிசெய்து கொண்டே இருந்தது. வயது ஏறிய அந்த மாதரசி, தள்ளாத நேரத்திலும் கணவன் சேவையே கடவுள் சேவை என்று நாட்டுக்காகவும், கணவரது உடல் நலத்துக்காகவும், தனது தள்ளாமையையும் பாராமல் அவருக்குரிய தேவைகளை செய்து கொண்டே இருந்தார்.

1943-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அன்னைக்கு இருமுறை இருதய நோய் தாக்கியது. அதற்கடுத்து டிசம்பர் மாதத்தில் மீண்டும் இரு முறை வந்தது. இத்தனை உடல் நெருக்கடியிலும் குணமாகி, குணமாகி மீண்டும் மீண்டும் கணவருடைய சேவையே தெய்வச் சேவை என்று செய்து கொண்டே வந்தார். 1944-ஆம் ஆண்டில் மீண்டும் மார்பு அடைப்பு நோய் வந்தது. இந்த நோய் வந்த போதெல்லாம் ஆங்கில அரசு தக்க சிகிச்சைகளை அவருக்குத் தந்து, அவரது உடல் நிலை விவரங்களை நாட்டிற்குத் தெரிவித்துக் கொண்டே இருந்தது.

அதே நேரத்தில் இந்திய மக்கள், கஸ்தூரி பாயை விடுதலை செய் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இதே போலவே இங்கிலாந்திலே வாழும் இந்தியர்களும் அன்னையை விடுதலை செய் என்று போராடினார்கள். ஆனாலும், ஆங்கிலேய அரசு அன்னையை விடுதலை செய்யவில்லை.

xxx