பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கஸ்தூரிபாய் மறைந்தார்:
காந்தியடிகள் கண்ணி மல்க 'ஹேராம்' எழுதினார்

தேவதாஸ் காந்தி, காந்தியடிகளின் இளைய மகன். சக்கரவர்த்தி ராஜாஜியின் மருமகன்! அவர் தனது தாயாரின் இறுதி நேரத்தைப் பற்றி எழுதியுள்ள மரண வரலாறு இதோ:

"எனது அன்னையாருக்கு கடைசி நேரம் வரை, ஒரு முறை கூட உணர்வு தவறவில்லை. பிப்ரவரி 20-ஆம் நாள் அவருடைய உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.

"ஆங்கிலேய அரசு அறிக்கை வெளியிட்ட போதும், எப்படியாவது நோய் நீங்கிப் பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு.

"இருதயம் பலவீனமாக இயங்கியதால் சிறு நீர்ப்பை அவருக்குச் சரியாக வேலை செய்யவில்லை. அத்துடன் தாயாருக்கு நிமோனியாக் காய்ச்சலும் கண்டுவிட்டது. ரத்த வேகமும் குறைந்து விட்டதால் டாக்டர்கள் என் தாயார் உயிர்மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

"திங்கள் கிழமை காலை நான் தாயாரைப் பார்க்கச் சென்றேன். அவர் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். உறவினர்களும், நண்பர்களும் செய்த ஓரளவு பணிவிடைகளால் அவர் நலமடைந்தவர் போலக் காணப்பட்டார்.

"அன்றிரவு டாக்டர்கள் சொன்னதற்கு மாறாக தாயார் உயிருடன் இருந்தார். இந்த உலகத்தில் அவர் உயிரோடு