பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

77திங்கட்கிழமை முதல் மருந்து அருந்த மறுத்து விட்டார். தண்ணீரும் ஏற்கவில்லை. ஆனால், செவ்வாயன்று மாலை கங்கை தீர்த்தம், ஒரு துளி வாயில் விட்டார்கள். அவராகவே வாய்திறந்தார். பிற்பகல் மூன்று மணிக்கு என்னைக் கூப்பிட்டு ஆள் அனுப்பினார். "நான் போனதும், என்னை அருகில் அழைத்து, 'நான் போகிறேன், என்றாவது போகத்தானே வேண்டும், இன்றே ஏன் போகக் கூடாது?" என்றார்.

"நான் அவருடைய கடைசிக் குழந்தை. நான்தான் அவருடைய வழியை மறித்துக் கொண்டது போல் இருந்தது. வேறு பல கனிவான வார்த்தைகளைக் கூறி என் அணைப்பிலிருந்து அவர் விலகினார். அதற்கு முன்னால் அவருடைய சொற்கள் இவ்வளவு தெளிவாக இருந்ததில்லை என்று எனக்குத் தோன்றியது.

"பேசியானதும், யாருடைய உதவியையும் நாடாமல் விரைந்து எழுந்து உட்கார்ந்தார். இருகைகளையும் குவித்துத் தம்மால் முடிந்த அளவு உரத்த குரலில் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். அவருடைய பிரார்த்தனையில் மீண்டும் மீண்டும் வந்த சொற்களை, நான் இவ்வாறு தான் மொழி பெயர்ப்பேன். 'ஆண்டவனே அபயம்; கருணை வேண்டி வணங்குகிறேன்!'

"கண்ணிரைத் துடைத்துக் கொள்வதற்காக நான் அறையிலிருந்து வெளியே வந்தேன். ஆகாகான் அரண்மனைக்கு அப்பொழுதுதான் பென்சிலின் ஊசி வந்தது. அதைப் பயன்படுத்த டாக்டர்கள் விரும்பவில்லை. சிறுநீர்ப்பைகளைப் பென்சிலின் இயக்காது, நிமோனியாவைக் குணப்படுத்தக் கூடிய இந்த மருந்தைத் தருவதற்கு ஏற்பாடுசெய்தார்கள். சுமார் ஐந்து மணிக்குத் தைரியப்படுத்திக் கொண்டு அம்மாவைப் பார்க்கச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் புன்னகை புரிந்தார். அந்தப்