உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அன்னை கஸ்துரிபாயின்


புன்னகைதான் நாற்பத்து மூன்று ஆண்டுகளாய் என்னைக் கெடுத்து வந்தது. மகனுக்குத் தைரியம் கூற மரண வேளையில் அன்னை வழங்கிய புன்னகை அது. என் தாய் புனிதத் தன்மையின் வடிவம். அவர் என்னிடம் மிகுதியாக அன்பைப் பொழிந்தார். அவரிடம் காணப்பட்ட இந்த வஞ்சவைக்காக அவரை மன்னிக்க வேண்டும் என்று அவருக்குத் தெரிந்த எல்லோரிடமும் அவர் சார்பில் வேண்டிக் கொள்கிறேன்.

“தம்முடைய படைப்பிலே, எல்லா விதங்களிலும் சிறந்து விளங்கிய ஓர் ஆன்மாவின் சின்னஞ்சிறு குறைகளைக் கடவுள் கட்டாயம் மன்னிப்பார். என் தாயாரின் புன் சிரிப்பினால், பென்சிலின் மருந்தின்மீது எனக்குப் பெருத்த நம்பிக்கை உண்டானது. அதைப் பற்றி டாக்டர்களோடு பேசினேன். அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனக்காகச் சோதனை செய்து பார்க்க அவர்கள் சம்மதித்தார்கள்.

"ஊசி குத்தி அன்னையை ஹிம்சை செய்ய நான் இசைந்ததைத் தந்தையார் அறிந்தார். மாலையில் வழக்கப்படி தோட்டத்தில் உலாவச் செல்லாமல் என்னோடு இதைப் பற்றிப் பேசவந்தார். 'நீ எவ்வளவு அரிய மருந்தைக் கொண்டு வந்து கொடுத்தாலும், உன் தாயாரை இனிமேல் குணப்படுத்த முடியாது. நீ வற்புறுத்துவதால் நான் சம்மதிக்கிறேன். ஆயினும், நீ செய்வது தவறு.

"இரண்டு நாட்களாக உனது தாயார் மருந்து உண்பது இல்லை; தண்ணீர் குடிக்கவும் மறுத்து விட்டாள். இப்போது அவள் பகவானின் வசம் இருக்கிறாள். உனக்கு விருப்பமானதைச் செய். ஆனால், நீ செய்வது சரியல்ல என்று எச்சரிக்கிறேன். சாகப்போகும் தாயை, நான்கு அல்லது ஆறு மணிக்கு ஓர் ஊசியால் குத்தி வலியால் துடிக்கச் செய்ய விரும்புகிறாய் என்றார் அவர். அவரை மறுத்துப் பேசுவது