பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

79


சரியாகாது, முறையாகாது. ஊசி குத்தும் யோசனையை நான் கைவிட்டதாக அறிந்ததும் டாக்டர்களும் அதை நிறுத்தி விட்டார்கள்.

"நானும் தந்தையாரும் இவ்வளவு அழகாய் ஒரு நாளும் பேசிக் கொண்டதில்லை. அது முடிந்ததும் அம்மா அப்பாவை அழைப்பதாகத் தகவல் வந்தது. அவர் உடனே போனார். அம்மாவை ஏந்தி அணைத்துக் கொண்டிருந்தோரிடமிருந்து விலக்கித் தாமே மார்போடு சாய்த்து அனைத்துக் கொண்டார்; தம்மால் முடிந்த ஆறுதலை அளித்தார்.

"அங்கிருந்த பத்துப் பேர்களோடு நானும் அம்மாவைப் பார்த்தபடியே நின்றேன். அப்போது அவர் முகத்தில் இருள் சூழ்ந்தது. அம்மா பேசினார். இன்னும் வசதியாக இருப்பதற்காகச் சிறிது அசைந்தார்.

"இமைப் பொழுதில் முடிவு வந்தது. அப்பா கண்ணீரை அடக்கிக் கொண்டார். மற்றவர்கள் கண்ணீர் பெருக்கினார்கள். எல்லோரும் பிறைவடிவில் கூடி, அம்மாவுக்குப் பிரியமான பிரார்த்தனைப் பாடலைப் பாடினார்கள். இரண்டே நிமிடங்கள். எல்லாம் முடிந்தன. அம்மா 7.35 மணிக்கு உயிர் நீத்தார்.

அன்று 1944-ஆம் ஆண்டு சிவராத்திரி நாள் புண்ணிய தினம்! அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எழுபத்தைந்து வயது. அம்மா உயிரைத் துறந்த போது அவருடைய மூன்று பிள்ளைகள், டாக்டர் சுசிலா நய்யார், பியாரேலால், பிரபாவதி தேவி, டாக்டர் கில்பர், கனுகாந்தி, சுவாமி ஆனந்தா ஆகியோர், அங்கு இருந்தார்கள். மரணத்துக்குச் சற்று நேரத்துக்கு முன்னால் கஸ்தூரி பாயின் ஒரே சகோதரர் மாதவதாஸ் கோகுல்தாஸ் பரபரப்பாக உள்ளே வந்தார். கணவன் மடியில் உயிர்துறந்தார் கஸ்தூரிபாய்!