பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘மங்கையராகப் பிறக்க மாதவம்
செய்திட’ வேண்டுமம்மா!

பெண்ணின் பெருந்தக்க யாவுள?' என்று வள்ளுவர் பெருமான் கேள்வி எழுப்பினார் பெண்ணின் பெருமை அவ்வளவு சிறப்புமிக்கது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அய்யன் திருவள்ளுவனாரின் கேள்வியோடு கொஞ்சம் ஆன்மிக தத்துவத்தைக் கலந்து, "மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்றார்.

கஸ்தூரி பாயின் உடல் தனது நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் அரும் பணிகளாற்றி ஓடாய் தேய்ந்து நோய்களால் பலவீனமானது.

ஆனால் அவர், ஒரு நாளும் இந்த நோய் நொடித் தண்டனைகளுக்காக அஞ்சி வாழ்ந்தது இல்லை. தனது கணவர் வாழ்வே தனது உயிர் வாழ்வு என்று வாழ்ந்து காட்டியவர் கஸ்தூரி பாய்.

அவர் சுபாவம் மென்மையானது, பணியாற்றும் பாங்கு மெதுவானது; நடப்பதோ அன்னத்தின் வேகம்; சுறுசுறுப்பு சிற்றெறும்பு ஓட்டம்! இத்தகைய பண்பாடுகள் பூண்ட கஸ்தூரிபாய், ஆன்மீக வழிபாடுகளில் மயில் போன்றவர்!

சபர்மதி ஆசிரமமானாலும் சரி, சேவாகிராம ஆசிரமமானாலும் சரி, அவர் அதிகாலை நான்கு மணிக்கே எழுவார், காலைக் கடனோடு நீராடலும் புரிந்து விட்டு