பக்கம்:அன்னை தெரேசா.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஓர் அங்கமென அங்கே குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டப் பிரிவொன்றும் செயலாற்றுகிறது. கிராமப் புறங்களில் அவதிப்படும் தொழுநோயாளிகள் உள்ளிட்ட நோயாளி களைத் தேடி வைத்தியம் செய்யும் வகையில், நடமாடும் மருத்துவமனைகளும் நடமாடி வருகின்றன. மேலும், அன்னை திட்டமிட்டு மேற்கொண்டுள்ள அன்புநலச் சேவைகளில் கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு விஜயம் செய்வதும் பயனுள்ள சேவையாக மதிக்கப்படுகிறது; கிறித்துவ சமயச் சித்தாந்தங்களை எளிதில் பின்பற்றத் தக்க நிலையில் விளுவிடை வடிவில் போதிக்கின்றனர். அதே நேரத்திலே, உலகத்தில் பின்பற்றப்பட்டு வருகிற வெவ்வேறு: மதங்களைத் தழுவிய தொண்டு மனம் படைத்த நல்லவர்களை ஈர்த்து வசப்படுத்துவதிலும் கருணை மிகுந்த இந்த இயக்கத்தின் புகழ் மேலோங்கி நிற்கிறது. தியாக உள்ளமும் சேவை மனப்பான்மையும் கொண்டவர்களில் பலர் பொதுநலப் பணி ஆர்வத்துடன் இங்கே வந்து இயன்ற பணிகளை அவ்வப்போது செய்து முடித்துத் திரும்பி விடுகிரு.ர்கள்! இவ்விதிக்குப் புவனத்தும் பெண்டிர் மாத்திரம் எங்ங்ணம் விதிவிலக்கு ஆக முடியுமாம்? தெய்வத்தின் அன்பைத் தெய்விகமான முறை நெறி. களில் கொண்டுசெலுத்தும் மதிப்பிற்குரிய தெரேசா அம்மை, எல்லை சொல்ல முடியாத கடல்களால் சூழப் பெற்று எல்லைகளைச் சொல்ல முடிந்த உலகத்தின் நாடு. களில் அவ்வப்போது நடக்கின்ற இயற்கையின் ஊழிக் . கூத்து முடியவும், நாட்டுமக்கள் நலன் பெற்று அமைதி பெறவும் அன்புப்பணி அமைப்புக்களில் பொதுப் பிரார்க் தனகளே அவ்வப்போது நடத்தவும் ஏற்பாடுகளைக் செய்திருக்கின்ருர் - உலகத்தின் எப்பகுதியில் போர்