பக்கம்:அன்னை தெரேசா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 ஏழைகள் பாக்கியவான்கள்; பாக்கியவதிகள். அவர்களுக்கெல்லாம் கண்கண்ட, கண் கானும் தெய்வமாகவே அன்னே தெரேசா கிடைத்து விட்டார்கள். பாரத சமுதாயத்தின் பொது மக்களில் பெரும் பான்மையினரால் பொதுவாக விலக்கி ஒதுக்கப்பட்டு வருகிற பிணியாளர்களில் தொழுநோய்க்கு ஆளான துரதிர்ஷ்டப் பிண்டங்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். Aார்ப்போரை அருவருப்புக்கு ஆளாக்கத் தக்கவர்கள். அதனுல்தானே என்னவோ, அவர்கள் மக்களிடமிருந்து அன்பையோ, ஆதரவையோ பெறமாட்டாமல், எட்டத்தி லேயே நிறுத்தப்பட்டவர்களாகித் தவிக்கவும் நேருகிறது. பாவம், அவர்கள் 'பாவம்' செய்த ஆத்மாக்களோ, என்ன்வோ? - விதி ஒருபுறம் ஒதுங்கட்டும்! ஆலுைம், அன்னே தெரேசாவின் மகத்தான அன்பு ஆண்டவனின் சக்தியைப் போல விரிந்து பரந்து ஆழிசூழ் உலகெங்கும் படரும் இயல்புடையது அல்லவா?-ஆகவே தான், அன்னைக்கும் அன்னை ஆகி, சமூகத்தால் பகிஷ்காரம் செய்யப்படுகின்ற குட்ட நோயாளிகளின் வருங்கால நலனுக்காகவும் கவலைப்படவேண்டியவர் ஆளுர்; அக்கறை காட்ட வேண்டியவர் ஆளுர். இந்நிலையில்தான், தேவமாதா போன்ற அன்னையின் எம்மதமும் சம்மதமான அறநெறிப்பணி இயக்கம் புதிதென மேற்கொண்டிருந்த தொழுநோயாளிகள் நலப் பணியின் நடைமுறையிலே தமது அன்பின் காணிக் கையைச் செலுத்தும் உயர் நோக்கத்துடன் அங்கு வந்து சேர்த்தார் டாக்டர் ஸென். தொழுநோய்ச் சிகிச்சை முறையில் கைதேர்ந்த இந்தக் கைராசிக்கா டாக்டர் இன் இனமும் கூட அங்கேயேதான் தமது சமூக நல அன்புப் பணி களைத்தொடர்ந்து வருகிரு.ர். அன்பு நல்ப்பணிமனை சார்ந்த துறவுக் கன்னிச் சகோதரிகளைத் தொழுநோயர் நலப் அ, தெ. - 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/105&oldid=736239" இலிருந்து மீள்விக்கப்பட்டது