பக்கம்:அன்னை தெரேசா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 அசிங்கமாக அச்சுறுத்தும் தொழுநோயைத் தடுக்கவும் தடுத்துக் கட்டுப்படுத்தவும் கட்டுப்படுத்திக் குணமடையச் செய்யவும் உத்வுமாறு, அன்னையைத் தேடி நல்ல பல புதிய மருந்துகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற அன்னிய நாடுகளிலிருந்து அந்நியோன்யத்துடன் வந்தன. இம் மருந்துகள் ஆரம்ப நிலைப் பிணியாளர்களைப் பாக்கிய வான்களாக ஆக்கின; ஆக்குகின்றன: 'கல்கத்தாவில் இயங்கிவரும் எங்களது பிரதானமான இயக்கப்பணி நிறுவனத்திலேயே தொழுநோயாளிகள் ஏராளமான பேர் சிகிச்சை பெற்றுக் குணம் பெற்று வரு கிரு.ர்கள். என்ருலும், எங்களுடைய நேரிடைப்பொறுப்பின் கீழ் உலகத்தின் பல்வேறு நாடுகளில் செயலாற்றி வரு கின்ற எங்கள் கிளை அமைப்புகளில் இன்றைய நிலையில் (1970-71) கிட்டதட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழுநோயர் எல்லா வழிகளிலும் எல்லா நலன்களையும் பெற்று மேம்பட்ட முன்னேற்றத்தைத் தரிசித்து வரு கின்றனர் என்னும் உண்மையான நடப்பினையும் நான் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுவேன்!’’ இதுவும் மேன்மை பொருந்திய அன்னயாரின் வாய் மொழிதான்! . உலகியல் ஆரவாரப் பண்டி பயின்ற சமுதாயச் செயற்கைப் பண்பாடுடைய மக்களின் மத்தியில், மக்க ளுக்கு மத்தியில், ஆக்கபூர்வமான அறிவின் ஆதாரத் தாலும் அனுபவ பூர்வமான அன்பின் அரவணைப்பாலும் மறுவாழ்வு பெறும் தொழுநோயாளிகளேப் பற்றியும் அவர் களுடைய எதிர்கால நிலை குறித்தும் அடுத்து ஒரு கேள்வி யையும் எழுப்புகிருர் பேட்டியாளர் மால்கம் மகரிட்ஜ். ஆகவே, மீண்டும் தாய்மனம் சிலிர்ப்படைகிறது: "இந்திய அரசாங்கம் எங்களுடைய அன்புநெறிப் பணி முறைக் கழகத்திற்கு முன்னர் வழங்கிய முப்பத்திநாலு ஏக்கர் பரப்பில் உருவான காந்தி நகரில் தொழு நோயாளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/107&oldid=736241" இலிருந்து மீள்விக்கப்பட்டது