110 யாமல் திணறினர். அன்னையே! இப்போது உங்கள் தொழு நோயாளிகள் இல்லம் அமைக்கப்பட்டுள்ள மனப்பரப்பு கல்கத்தாவின் வளர்ச்சித் திட்டத்துறைக்குச் சொந்த மானது; நகரின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருப்பதால், நகரத்தையும் விரிவு படுத்த வேண்டி யிருக்கிறது; ஆகையால்தான், அரசின் முடிவை மாற்றவோ, மறுபரிசீலனை செய்யவோ இயலவில்லை. உங்கள் தொழு நோயாளிகளுக்கு வேறு நல்ல இடமாகத் த ஏற்பாடு செய்வேன், அம்மையே!’ என்று அன்னையிடம் நிலையை எடுத்துரைத்து, தமது விருப்பத்தை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார் முதல்வர். அவ்வாறே, டாக்டர் பி. ஸி. ராய் அவர்களின் அரசு அன்னே தெரேசா அவர்களிடம் அன்போடு வழங்கிய மனை இ-ம் கல்கத்தா பெருநகரில் அஸன்ஸால் என்னும் இடத்திற்கு அருகில், 34 ஏக்கர் பரப்பளவு உடையதாக அமைந்தது. குஷ்டரோகிகளின் நோய் நலவின் இயலாத நிலைமைகளே அகற்றி, முன்போல அவர்களே வாழ்க்கை நெறி முறைகட்கு உட்படுத்தி அவர்களுக்குப் புத்துயிரும் புது மலர்ச்சியும் வழங்கும் வகையில் மறுவாழ்வு மையம் ஒன்றையும் அங்கே நிர்மானித்தார் .ெ த ேர ச ா அன்னேயார். ರ್೨ಪಿ முன்னம் தெரிவித்தமாதிரி, விரிந்து பரந்த அந்தப் பகுதிதான் பின்னர் சாந்தி நகர் என்று அழைக்கப் படுகிறது. அழகானதொரு பெரிய கிராமம். ஹெளரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 200 மைல் தொலைவு. வெறும் பொட்டல் வெளியாக இருந்த இடத்தை ஒர். அழகுச் சோலையாக அழகூட்டும் ஓர் அன்பாலயமாக மாற்றிய-உருமாற்றிய பெருமைக்கு பரிசுத்தச் சகோதரி ஃபிரான்ஸிஸ் ஸ்ேவியர் உரிமையுள்ளவர். . . . . . . . . . . . . . .
பக்கம்:அன்னை தெரேசா.pdf/110
Appearance