பக்கம்:அன்னை தெரேசா.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 "அன்பின் தூதர்கள்’ என்னும் மகுடத்தையும் சூட்டி, ஏழைகளின் ஏழைகளுக்கு உண்டான அன்புப் பணிகளே நடைமுறைப் படுத்தவும் தொடங்கி விட்டார்!. உலக வாழ்கையின் சோதனைக் களத்திலே, மாதவம் செய்து பிறப்பெடுத்த மங்கை ஒருத்தி, எதிர்ப்படும் சோதனைகளையெல்லாம் எதிர்கொண்டு வெற்றிவாகை குடும்போது, அவள் தாய் எனும் உயிர்த் தத்துவமாகவே ஆகிவிடுவாள்! மண் வாழ்வில் பெண் விதியும் இதுவேதான். அர்ச் சூசையப்பர் நினைவுப் பெருநாள் விழாவில் (19, மார்ச் 1949) சகோதரி தெரேசாவை "அன்னை' என மக்கள் அழைக்கலாயினர்! வாழும் அன்னை, அன்பின் விதிக்கு வாழும் சாட்சி!... 1950, அக்டோபர், 7: அன்பிற்கு ச் சட்டமும் சாட்சியுமான நாள் அல்லவா இது! மனித அறிவின் வழி முறையிலும், சமூகநீதியின் முறை வழியிலும் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, உலகத் தில் மக்களுக்கு மத்தியில் அன்பையும் அமைதியையும் வாழ்த்தவும் வாழச் செய்யவும் வேண்டி அன்னே தெரேசா அன்று விதைத்த அன்பு என்னும் வித்துத் தான் இன்று அகில உலகமும் தழுவி நிற்கும் அன்பின் தூதுவர்கள். என்னும் மகோன்னதமான கற்பக விருட்சமாகவே ஓங்கி வளர்ந்து, உலகை அளந்து கொண்டிருக்கிறது. - - அன்னே அன்போடும் மனிதத்தன்மையோடும் மண்ணின் மைந்தர்களின் நெஞ்சங்களிலே விதைத்திட்ட அன்பு:விதை முளை கிளம்பத் தொடங்கியது! - அறநெறி சார்த்த அன்பின் தூதுவர்கள் எனப்படும் ஏழைச் சமூக நல அன்புப் பொதுப் பணி அமைப்பு. மேதகு போப் ஆண்டவரின் அன்பான ஆசியுடனும்