பக்கம்:அன்னை தெரேசா.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

li3 முறையான அனுமதியுடனும் அன்றி, 7-10-1950-ல் கல்கத்தா உயர்நீதி மன்றத்திலே சட்டமுறைப்படி பதிவு: செய்யப்பட்டது! தெய்வாம்சம் பொருந்திய மானுடத் தருமத்தின் நெறிமுறையான அடிப்படை ஆதாரங்களின்பேரில் அன்னே தெரேசா உருவாக்கிய அன்பின் தூதுவர்கள்’ என்னும் புதியதான அன்புத் திருச்சபைக்கான செயல் நடைமுறை அமைப்பாண்மை விதிகள் உருவாக்கப்பப்பட்டன. மனிதாபிமானத்தின் ஒழுங்குகளும் மனிதப் பண்பின் கட்டுப்பாடுகளும் நிரம்பின அன்பின் இயக்கத்தின் சட்டத் திட்டங்களுக்கு உயிர்நாடி இவ்வாறு நிர்ணயம் பெற்றிருந்தது: '. ஆண்டவன்தான் அன்பு!- அன்புதான் ஆண்டவன் - மனிதச் சமுதாயத்திலே, ஏழைகளில் மிகுந்த ஏழை எளிய மக்களுக்கு இன்றியமையாத தருமத்தொண்டுகளைச் செய்யக் கடமைப் பட்ட தூய சகோதரிகள் அனைவரும் உண்மை மிக்க அன்புச் சேவகிகளாகச் செயலாற்றக் கடமைப் பட்டவர்கள். அவர்கள் மனத்திலும் ஆன்மா விலும் அறத்தைப் பேணுவதோடு, அந்த அறத்தை அன்பு வழிகளில் கிறிஸ்தவர்கள் அல்லது, கிறிஸ்தவர்கள் அல்லாத பிற மதத்தினரான ஏழை எளியவர்களின் இதயங்களில் பரப்பவேண்டியதும் அவர்களது கடமை ஆகிறது!...” 'ஏழை எளியவர்கட்கு இலவசமாகவும், அன்பாகவும்: உழைப்பதையே உயிருக்குயிரான நோக்கமெனக் கொண்ட மிகப் புதிதான இந்த அன்புத்தூதர்கள் சபையைத் தோற்றுவித்து நடத்துவதற்கு உரித்தான சமய நிறைவான ஒப்புதலே 1950, அக்டோபர் 7ஆம் நாளில், மிகப் புனித மான வாய்முறை வழிபாட்டுத் திருநாளன்று, கிறிஸ்தவத் திருச்சபைகளின் ஆதிமுதல்வரான மேதகு போப் ஆண்டவர் அவர்கள் ஆசிகள் சூழ வழங்கினர்கள்!'உலகம் முழுவதிலும் கொடி முல்லையென மணம் பரப்பிப்