‘114 படர்ந்து பரவியுள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தின் பலதரப்பட்ட தொண்டு வழிகளிலே, அன்னை தெரேசாவின் அறநெறி சார்ந்த அன்பின் பணி இயக்கம் உன்னதமான தொரு நிறுவனமாக விளங்குகிறது!" என்றும் அவர்கள் பாராட்டிஞர்கள்! ஏழைகளிலே மிக மிக ஏழைகளுக்கு உதவிகள் செய்து, அவர்களுக்கு அன்பை வழங்கவும், அவர்களிடமிருந்து அன்பைப் பெறவும் வேண்டுமென்பதே அன்னையின் அறப்பணி இயக்கத்தின் மனிதாபிமானம் நிரம்பிய தார் மிகக் குறிக்கோளாக அன்று முதல் இன்று வரையிலும் இயங்கியும் இயக்கப்பட்டும் வருகிறது. ஏழை, தன்னுடைய வறுமையோடு தனக்குத் தானே போராடவும் போராடிக் கொள்ளவும் முடியும்; ஆல்ை, கடைக்கோடி ஏழை மக்களால் அவ்வாறு போராட முடிவ தில்லே!-அவர்களுக்கு இங்கே எதுவுமே கிடையாது, யாருமே கிடையாது; அவர்களுக்கென்று பின்னணியில் ஏதாவது உலகிலே இருந்தால் தானே?... எனவே, அத்தகையவர்களுக்கு அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படுவது, அன்பு ஒன்றுதான்! பேட்டியாளரிடம் அன்னை இவ்வாறு விடையளித்தார்: பேட்டியாளர் மால்கம் கேட்ட கேள்வி இதுதான்: 'ஒட்டு மொத்தமாக, ஏழைகளுக்குப் பணி செய்வது என்றில்லாமல், ஏழைகளில் மிகுந்த ஏழைகளுக்குச் சேவை புரிவது என்கிற ஒரு நோக்கத்தைத் தாங்கள் தேர்வு செய்ததற்கு என்ன காரணம்?” கேள்வி தொடர்கிறது: "ஏழைகளுக்கு அவசிய மானது அன்பா? -இல்லை, உணவா??? தொடர் சேர்கிறது பதில்: "அன்புதான்! - மனித லுக்குத் தொல்லேயென்ருல், நிவாரணம் அவசியப் படலாம். ஆனல், முடிவிலே அவனுக்கு அதிகமாகத்
பக்கம்:அன்னை தெரேசா.pdf/114
Appearance