பக்கம்:அன்னை தெரேசா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 அவர்கள் அன்புடன் நினேந்து அமைதியோடு மகிழ்ந் தார்கள். - - உலகமும் அவ்வாறே கருதிற்று. நடப்பும் அதுதான். -- அன்னைக்குக் கிட்டிய நோபல் பரிசு அன்புப்பணி: இயக்கத்திற்குச் சேர்ந்தது! உலகத்திலிருக்கின்ற கடையரினும் கடையரைப் பற்றிக்கூட இந்த உலகம் தார்மீக பண்புநெறியோடு சிந்தித்துப் பார்க்கத் தலைப்பட்டிருக்கிறதே என்பதில் அன்னேக்கு அளவுகடந்த ஆறுதல் கனியத் தலைப்பட்டது!"உலகித்தின் பெருமையை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் இந்த நோபல் பரிசை ஏழைகளின் பேராலேயே நான் ஏற்றுக்கொள்ள வேண்டியவள் ஆகிறேன். காரணம் இது: தான். எனக்கு இப்பரிசை வழங்குவதன் மூலம், உலகில் ஏழைகள் இருக்கிரு.ர்கள் என்னும் உண்மையை அவர்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதை நான் நம்பவும் செய். கிறேன்!” நோபல் சமாதானப் பரிசிலை நேரிலே பெற்றுக் கொள்ள இயக்கத்தின் சகோதரிகளும் சகோதரர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நார்வே நாட்டுக்கு. அன்னை புறப்பட்டார்கள். ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் அன்னைக்கு. மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. - உலகத்தின் நாடுகளிலே அச்சமயம் அன்னையைப் பற்றியேதான் மக்களும் பேசிக் கொண்டிருந்தனர்; ஏடு: களும் பேசின. இந்தியப் பிரஜை ஆன அன்னை தெரேசாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதில், இந்திய நாடே பெருமிதம் கொண்டது, பெருமை கண்டது எனவும் சொல்ல வேண்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/119&oldid=736254" இலிருந்து மீள்விக்கப்பட்டது