பக்கம்:அன்னை தெரேசா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 உலக அமைதிக்கான உலகில் உயர்ந்த பரிசை அமைதி :யுடன் பெற்றுத் தெரேசா அன்னை இந்திய நாட்டுக்குத் திரும்பினர்1-அன்னை தெரேசா, முந்தையத் துறவுக் கன்னி அக்னெஸ் ஆக 1929 ஆம் ஆண்டில் கல்கத்தாவின் இந்திய மண்ணை மிதித்த அந்தப் புனிதமான பொன்னை சுப நாள் 1979 ஆம் ஆண்டிலே, மறு பிறவி எடுத்தது. அன்னை மெய்ம் மறந்தார்கள்!-ஒர் ஆத்மாவின் பிர யானம்’ என்னும் தலைப்பில் உள்ளத்தைத் தொடும்படி யான சுய சரிதையை எழுதி 1897-ல் தமது 24.ம் வயதில் அகாலமரணம் அடைந்த பிரஞ்சு ஞானியான குழந்தை -ஏசுவின் புனிதை தெரேசாவின் நினைவாக 1931-ம் ஆண்டில் தெரேசாவாக ஆனது, லொரெட்டோ கன்னி மார்கள் நடத்திய புனிதமேரி பள்ளியில் 20 ஆண்டுகள் (1929-1948) ஆசிரியையாகவும் தலைமை ஆசிரியையாகவும் பணி செய்தது. இந்திய நாட்டின் ஏழைமக்களுக்குப் பணி புரிய வேண்டுமென்ற விருப்பத்தில் பிறந்த நாட்டைத் துறந்து கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தபின், 1946 ம் ஆண்டில் கடையரினும் கடையருக்கு ச் சேவை செய்வாயாக!” என்னும் தெய்வ அழைப்பு தமது மனத்தின் மனத்தில் எதிரொலிக்கவே, லொரெட்டா மடத்தை விட்டுப் பிரிய மேலிடத் துக்கு அனுமதி கோரி, அனுமதி பெற்று 1948-ல் இந்தியப் பிரஜை ஆனது, பின்னர் மோதிஜில் சேரிப் பகுதியில் வெறும் ஐந்தே ஐந்து ரூபாயோடு தெய்வப் பணியைத் தொடர்ந்து பள்ளி ஒன்றை ஆரம்பித்தது, அப்புறம், 1950-ம் ஆண்டில் "அன் பின் துரதர்கள்’ என்று அழைக்கப்பட்டுவருகின்ற அறப்பணி இயக்கத்தைத் தோற்று வித்தது, இறந்து கொண்டிருக்கும் அைைத களுக்குப் புனிதமான இதயம் படைத் திட்ட பரிசுத்த நாயகரின் பேரால் நிர்மல் இருதயம்' என்னும் ஒர் இல்லத்தை 1952-ல் ஏற்படுத்தியது, பின்னர், காசநோய் போன்ற உயிரைக்குடிக்க வல்ல பயங்கர நோயாளி களுக்கும் அடைக்கலம் தந்த அன்புப் பணி அமைப்பின் அன்புச் சங்கிலியினை மேலும் இறுக்கமாக்கும் வண்ணம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/120&oldid=736256" இலிருந்து மீள்விக்கப்பட்டது