பக்கம்:அன்னை தெரேசா.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 தம்மை தாமே அர்ப்பணித்துக் கொள்வதாலேயே, நமது நாடு வளம் பெற்று முன்னேற்றமடைய முடியுமென்றும் வலியுறுத்தியதையும் நாட் டு மக்கள் என்றென்றும் வாழ்த்துவார்கள்! இப்போது 1983-ம் ஆண்டு மறுபடி உலகின் கவனத்தைப் பற்றி நின்றது!-வரலாற்றின் தலைவியாம் பாரதப் பிரதமர், புதுடில்லியில் நவம்பரில் சாம்ராஜ்யத் தலைவர்களின் மாநாடு ஒன்றையும் ஒன்று கூட்டி, உலகத்தில் அன்பும் அமைதியும் ஒத்துழைப்பும் உடன்பாடும் வளரவும், வாழவும் பெரிதும் பாடுபட்டார். அப்போது தலைநகரில் நடைபெற்ற விருந்தொன்றில் பிரதமர் திருமதி காந்தி அவர்கள் உலக அமைதியைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பதில் மேற்கொண்டிருக்கும் நன்முயற்சிகளின் மூலம் உலகின் மிகச் சிறந்த அரசியல் தலைவியாகவும் விளங்குகின்ருர் என்பதாக காமன் வெல்த்’ அரசுகளின்பல்வேறு தலைவர்களும் ஒருமுகமாக ஏற்றிப் போற்றினர்கள். - உலகில் அமைதி வாழ்ந்திட அரசாங்க முறைமையில் பாடுபடுகிருர் பிரதமர் இந்திரா! உலகில் அமைதி வளர்ந்திட, அன்பு முறையிலே பாடு படுகிருர் அன்னை தெரேசா! உலகின் பழம் பெரும் நாடான பாரதத்தின் பிரதமத் தலைவி மேதகு இந்திராகாந்தி, உலகத்தின் நல்ல ைமதிக்கு வழிகாட்டி, நாட்டின் தலைநகரில் கூட்டிய சாம்ராஜ்யத் தலைவர்கள் மாநாட்டில் க்லந்து கொள்ள இருபதாண்டுகள் கழித்து மீண்டும் பாரதத்துக்கு வருகை தந்த இங்கிலாந்து ராணி எலிசபெத், நவம்பர் 26-ம் நாளில் (1983) திருமிகு அன்னை தெரேசாவுக்குப் பாராட்டு விழா ஒன்றை நடத் தினர். விழாவில், உலக சமாதானத்திற்கான உலகப்