பக்கம்:அன்னை தெரேசா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அன்பின் பணியாளர் உலகம்! - ஆதி அந்தம் காண முடியாத இப்புவனத்தை உண்டு பண்ணி, பேணிக்காத்து, நீதியுடன் பரிபாலனம் செய்து ரட்சிக்கின்ற மூலசக்தியும் ஆதாரசக்தியுமாக விளங்கும் ஆதிபராசக்தி தான் அன்னபூரணி. r உலகத்து நாயகியிடம் அன்று பிrாம் தேஹறி!' என்று பிச்சை கேட்க ஒர் ஆதிசங்கரர் இருந்தார். உலகத்தின் அன்புத் தாயாகப் பேர் பெற்ற அன்ன்ே தெரேசாவிடம் பசிக்கு உணவு கேட்க ஓர் ஏசுலல்ல, கோடிக்கணக்கான ஏசுக்கள் இன்று காத்திருக்கிருர்கள்! தமிழ் மண்ணுக்கு உரித்தான துறவுக் கன்னி மணிமேகலைதான் மறு பிறப்பெடுத்து பாரதத்தின் மண்ணிலே தெரேசா எனும் அன்னையாகத் தரிசனம் தந்து கொண்டிருக்கிருளோ? - - -

  1. . &} # நாடுகளிடையே பரஸ்பரம் நேசமான உறவும், பிரியமான அன்பும், நல்லதனமான இணக்கமும், உணர் வான ஒத்துழைப்பும் உடன்பாடும் நிலவுவதன் நற். பலகைவே, உலக அரங்கத்தில் நல்லமைதி தழைத்துச் செழிப்படைய முடியுமென்பதற்கு நேற்றும் இன்றும் நாளையும் நிரந்தரமான சாட்சியங்களாக விளங்கக் கூடிய உலகப் பெருந்தலைவர்களிலே பாரதத்தின் ஜன. தாயக சோஷலிஸ்ப் பிரதமர் ஜவர்ஹர்லால் நேருவும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/129&oldid=736265" இலிருந்து மீள்விக்கப்பட்டது