பக்கம்:அன்னை தெரேசா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 செய்து தமிழ் மண்ணைச் சார்ந்த வேலூர் எனும் நகரத்தைத் தமது மருத்துவப்பணி மனைகளைக் கொண்டு உலகப்புகழ் பெறச் செய்த பெருமைக்கு உரிய அமெரிக்க நாட்டு அம்மையார்தான் டாக்டர் ஐடா ஸ்கடர் (Dr. Ida Scudder) -gsurrij (1870—1960). g)É& uu நாட்டில் பொருளாதார ஏற்ற இறக்கம், அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் சாதிக் கொடுமை-தீண்டாமை போன்ற எல்லைகள் காரணமாக எல்லையற்ற தொல்லைகளை அனுபவிக்க நேர்ந்த பெண்களின் நல்வாழ்வுக்காகவும் தொண்டாற்றியவர் அவர். அம்மையார் இந்தியாவில் குடியேறிய காலத்தில்' நமது இந்தியப் பெண்மணிகள் பிரசவகாலங்களில் பெண் டாக்டர்கள் இல்லாததால் பெருமளவில் துயரப்பட நேர்ந்த நடப்பை அனுபவ பூர்வமாக உணர்ந்து, தாமே ஒரு டாக்டர் ஆனவர். மருத்துவத் துறையிலே பெண் களையும் உருவாக்கிப் பெண் குலத்துக்குச் சேவைகள் செய்யவேண்டுமென்ற சீரிய கருத்துடன், 1918.ல் வேலூரில் மருத்துவக் கல்லூரி ஒன்றைப் பெருமுயற்சியின் பேரில் தோற்றுவித்தார். பாவேந்தர் பாடினமாதிரி, இருட்டறையில் உழன்ற உலகத்திற்கு-ஏழைகளின் உலகத்திற்கு நந்தா விளக்கெனப் பணிபுரிந்திட ஆங்கில நாட்டு மருத்துவத் தாதியான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் மாதிரியே, டாக்டர் ஐடாவும் அமரப் புகழ் கொண்டு விளங்குகிரு.ர். டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்லர் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஸாம்பரீன் என்னும் இடத்தைத் தமது அரிய மருத்துவப் பணிகளின் மூலம் உலகப் பிரசித்தம் அடையச் செய்யவில்லையா? அதைப் போலவே, தமிழகத்தைச் சேர்ந்த வேலூரைத் தமது மருத்துவத் தொண்டால் உலகப்புகழ் பெறச் செய்தவர் டாக்டர் ஐடா ஸ்கட்ட்ர். வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரியின் இருதயச் சிகிச்சைத் துறையின் வெள்ளி விழா அ.தெ. - 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/137&oldid=736274" இலிருந்து மீள்விக்கப்பட்டது