பக்கம்:அன்னை தெரேசா.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 அவர்களின் வாழ்க்கையே தெய்விகம் நிரம்பிய, அதிசய மானதோர் சரித்திரம் என்றும் சொல்ல வேண்டும். அச்சமயத்தில் தன் கையிருப்பில் தெய்வாதீனமாகத் தங்கியிருந்த அதிசயமான ஐந்தே ஐந்து ரூபாயைக் கொண்டு கல்கத்தா மோத்திஜில் சேரியில் அன்னே தெரேசா அவர்கள் ஆரம்பித்த பள்ளி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்தது போலவே, அன்னையின் பொதுநலப் பணிகளும் வளர்ச்சியடையலாயின. அன்பிற்காக ஏங்கிய வர்களாக, நடுத்தெருக்களில் செத்து மடிந்து கொண் டிருந்த ஏழைகளைத் தேடி அலைந்து கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, மண்ணுலகில் அவர்கள் வாழக்கூடிய சில மணி நேரத்திலாவது நிம்மதியை அனுபவிக்கவும் வழிகளைச் செய்தார். அப்படிப்பட்ட சூழலிலேதான், கடவுளின் குழந்தைகளான ஏழை எளியவர்களைக் காப்பதற்கு ஒர் இல்லம் அவசியம் தேவை யென்பதையும் உணர்ந்தார். நாட்கள் மெய்யான உள்ளன்பை ஒத்து, ஆரவார மின்றி ஒவ்வொன்முக நகர்கின்றன. அன்னையின் உளந்தோய்ந்த பொதுத் தொண்டுகளை மக்கள் உளமார அறிகினறனர். - பரிசுப்பொருட்களும், உணவுப் பண்டங்களும், போர் வைகள் மற்றும் மருந்துகளும் அன்னையின் அன்பைத் தேடி வருகின்றன. அன்னையைப் பொறுத்த அளவில், கர்த்தர் ஏசுவின் அன்பும் கருணையும்தான் அவருக்கு உயிர், உலகம், வாழ்வு எல்லாம்! பாவப்பட்ட ஆத்மாக்களின் பாவ மன்னிப்புக் கென அன்னே தோத்திரம் செய்து, தேவதூதனின் ஆசீர் வாதத்தை வேண்டும் நேரங்களும் கூடலாயின. அன்பை விதைத்தார் அன்னை. அன்னே அன்பின் விளைச்சலை அறுவடை செய்கிழுர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/139&oldid=736276" இலிருந்து மீள்விக்கப்பட்டது