பக்கம்:அன்னை தெரேசா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ஆகின்றனர்?-நெறி பிசகிய இத்தகைய அதர்மப் போக்குக் காரணமாகின்ற விதி' என்ன? இதுவேதான் படைப்பின் புதிரா? இப்புதிரில்தான் விதி விளையாடுகிறதா? என்ன விதியாம் அது? திவவேள்வி என்னும் விளைநிலத்திலே தூய அன்பு என்னும் ஆல மரத்தை ஊன்றி நட்டு, தியாகம் என்கிற நீர் ஊற்றி, கடமையுடனும், கட்டுப்பாடுடனும் வளர்த்த அந்த ஆலமரம் உலகம் போற்றத் தக்கபடி, ஒர் அன்பு இயக்கமாகத் தழைத்து உலகம் யாவையும் ஆக்கிய ஆண்டவனின் அருளாலும் அன்னே தெரேசாவின் அயராத பணிகளாலும் உலக நாடுகளில் விழுதோடிக் கிளைகள் தோன்றலாயின. இந்தியப் புனித மண்ணில் அன்னை தொடங்கி வைத்த அன்புப் பணி இயக்கத்தின் (Missionaries of Charity) முதல் மைய நிலையம் இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்ட இடம் வெனெஸ்குலா (Wenuzuela) எனப்படும் லத்தீன் அமெரிக்க நாடு ஆகும். 1965-ம் ஆண்டில் அந்நாட்டின் மதகுருவின் அழைப்பின் பேரில் கார்ாகஸ் தலைநகருக்கு அருகி ல் நிறுவப்பட்டது. தொடர்ந்து, கொலம்பியா, பிரேஸில் முதலிய தென் அமெரிக்க நாடுகளிலும் அன்புப் பணி தொடரலாயிற்று. இலங்கையில் (பூரீலங்கா) கொழும்பு தகரத்தில் 1967-ம் ஆண்டில் அன்பின் இயக்கத்துக்கு ஒரு சேதுப் பாலம் சமைக்கப்பட்டது. . கிறிஸ்தவ மதத்தின் புண்ணியத் தலமான ரோம் நகரிலும் அன்னையின் அன்புப் பணி இயக்கம் தனது கேந்திரம் ஒன்றை அமைத்திட வேண்டுமென புனிதத் தந்தையாம் போப் ஆண்டவர் விருப்பம் தெரிவித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/144&oldid=736282" இலிருந்து மீள்விக்கப்பட்டது