பக்கம்:அன்னை தெரேசா.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#49 "ஆண்டவனே அன்பு: ஆண்டவன் மக்கள் எல்லோரை அமே நேசிக்கிருர். அதேபோல், மக்களும் ஒருவரை யொருவர் நேசித்தல் அவசியம். அப்போதுதான், ஒவ்வொருவரும் அன்புக்குத் துTது சென்று, அமைதியை உலகிடை வாழவைக்க இயலும். அனைவரையும் ஆண்டவன் ஆசீர் வதிப்பாராக!" இங்கே: காசுதான் கடவுள் என்கிருர்கள். இது உலக மொழியாகவும் இருக்கலாம்; உலக வழக்காகவும் இருக்கக் கூடும். - குமாரி அக்னெஸ்ாக அன்னை இருந்த அக்காலத்தில் அவருக்குக் கைவசம் இருந்த அந்த ஐந்து ரூபாய்தான் கடவுளாகத் தோன்றியிருக்கவேண்டும். காரணம் இது தான். மோதிஜில் சேரிப்பகுதியில் அவர் நடத்த விரும்பிய ஏழைப் பள்ளிக்கான குடிசையின் வாடகை சரியாக ரூபாய் ஐந்து மட்டுமே தான் என்பதை அறிந்ததும், அவர் மனக் கண்ணில், சிலுவையிலே உயிர்த்த ஏசுதான். தோன்றியிருக்க வேண்டும். - வெறும் ஐந்தே ஐந்து ரூபாயில், மெழுகுவர்த்திப் பூஜையும் வாய்முறை வழிபாடும் நடத்திய துறவுக்கன்னி அக்னெஸ் அன்று தொடங்கிய அன்புப் பணிதானே இன்று அக்னெஸ் அன்னை தெரேசாவென உலகத்தின் மத்தியில் அன்புக் கலங்கரையாக ஒளி காட்டவும், வழிகாட்டவும் செய்திருக்கிறது! - இந்நேரத்தில் அன்னே ஒரு சமயம் மனம் திறந்தும் மெய்ம் மற்ந்தும் சொன்ன பக்திபூர்வமானதோர் உண்மை அன்பிற்கு ஓர் ஆர்வத் தூண்டுதலாகவே அமையும்! - "நான் பணத்தைப் பற்றி என்றைக்குமே கவலைப்பட்டது கிடை காது. ஏழைமக்களுக்குச் சேவை செய்வதில் பணம்