பக்கம்:அன்னை தெரேசா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கொண்டிருக்கும் அன்னை தெரேசா அவர்கள் மீண்டும் குரல் கொடுக்கிருர்கள். இ? இயேசு வானகத் தந்தையுடன் இணைந்து தனது பணிகளைச் செய்தார்; நாமும் இறைவனோடு இணைந்து செயற்பட்டால் மட்டுமே, பொதுப்பணி சிறக்கும்; நிறக்கும். இறைவன் நம்மில் வாழ, நாம் துர்ய நெஞ்சம் உடையவர்களாக விளங்க வேண்டும். உங்கள் முழு ஆன்மாவோடும், இதயத்தோடும், பல த் தோடும், அறிவோடும் இறைவனுக்கு அன்பு செய் யுங்கள். இல்லாமையால் வாடுவோர் இறைவனின் மக்கள். உங்களை முழுவதுமாக ஆண்டவனுக்கு அர்ப்பணித்து, அவரின் நினைவுகளைச் சித்திரியுங்கள்! - அமைதியின் பணிகள் இல்லையெனில், நமது அன்பின் அலுவல்கள் எல்லாம் வெறுமையாக ஆகிவிடும்! "நான் பசியாக இருந்தேன்!” என்று இயேசு கூறியது, உணவிற்காக மட்டுமல்ல; ஆனால், துர்ய இதயத்திலிருந்து வரும் அமைதிக்காக. நான் தாகமாய் இருந்தேன்!” என கர்த்தர் சொன்னது, தண்ணிருக்காக மட்டுமல்ல; ஆனல், போர் வெறியைத் தணிக்கும் அமைதிக்காக! நான் ஆடையற்று இருந்தேன்!” என்று அவர் பகர்ந்தது உடைக்காக மாத்திரமல்ல; ஆல்ை, ஆண்-பெண் உடலின் உணர்வுகளின் புனித் தன்மைக்காக, நான் வீடு இன்றி இருந்தேன்! என்பதாக அவர் செப்பியது, கற்களும் கூரையும் கொண்ட வீட்டை அல்ல; ஆனல், அன்பு. நிறைந்து, பாதுகாப்பு அளித்து, பிறரைப் புரிந்து கொள்ளும் இதயத்திற்காகவே! கடவுளின் அமைதியை நாம் வெளிப்படுத்துவோம்; ஆண்டவனின் ஒளியை நம்பிக்கையுடன் ஏற்றுவோம்; போற்றுவோம். பரிசுத்த நற்கருணையில், அப்பத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/154&oldid=736293" இலிருந்து மீள்விக்கப்பட்டது