பக்கம்:அன்னை தெரேசா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 வடிவில், நாம் இறைவனக் காண்கிருேம், நமது அன்புப் பணிகளில் ஏழைகளிடம் ஆண்டவனை உடலோடும் உயி ரோடும் ரத்தத்தோடும் காண்கிருேம்! - இறைவா! பிறரிடம் ஆறுதல் தேடுவதை விட, பிறருக்கு நான் ஆறுதல்தரவும், பிறர் என்னைப் புரிந்திடல் வேண்டுமென்பதைவிட, நான் பிறரைப் புரிந்து கொள் ளவும், பிறர் எனக்கு அன்பு செய்தல் வேண்டுமென்பதை விட, பிறருக்கு நான் அன்பு செய்திடவும் அனுக்கிரகம் செய்!-ஏனெனில், தன்னல மறுப்பிலேதான், பொது நலமும், மன்னிப்பதிலேதான் பெருமன்னிப்பும், மரிப் பதிலே தான் மரணமில்லாப் பெரு வாழ்வும் சித்திக்க முடியும்!” - . . - மனிதாபிமானம் சிறக்கவும், பெண்மை நிறக்கவும், தாய்மை சிலிர்க்கவும் அன்னே நிறுவிய அன்பின் இயக் கத்தில் உடலில் உயிராக, தெய்வத்திற்கு அழகான தத்து வம் ஒன்றும் பொதிந்து கிடக்கின்றது. உண்மைத் தவத்தின் உயர்வான தத்துவம். - . அன்னை சொல்வார்கள்: "எங்களது இயக்கத்தின் சகோதரிகள் செபத்தையே தங்கள் சமூக சேவையின் மையமாகக் கொண்டு வாழ்வதால், ஆண்டவனின் அழைப் பாணக்கு விசுவாசமாக, தங்களுடைய அன்புப் பணி வாழ்வில் உறுதியாகவும் இருக்க முடிகிறது!’ ஒன்றே தெய்வம்!-ஒருவனே தேவன்!’’ உலகம் கண்ட உண்மை இது. உலகம் கொண்ட நியமம் இது. ஆனலும், கடவுளுக்குதான் எத்தனை, எத்தனை வடி வங்கள்! - 'பால்வாய்ப் பசுந் தமிழில் உயிர் வாழ்கின்ற கவி யரசு கண்ணதாசன், உலகிடைக் கடவுளின் நிலையை உயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/155&oldid=736294" இலிருந்து மீள்விக்கப்பட்டது