பக்கம்:அன்னை தெரேசா.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 உலகம் வாழ்ந்திட, உலகை உண்டாக்கிய அலகிலா விளையாட்டுடைய ஆண்டவனின் மலர்ச் சிலம்படிகளே வாழ்த்தி வணங்குதல் வேண்டும். - - இந்த 1983 தீபாவளி நன்னுளில் பூரீ காஞ்சி காமகோடி பீட ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கர்நூலிலிருந்து 'ஹிந்து வழியே மக்களுக்கு அனுப்பிய செய்தியில் இவ் வாறு கூறுகின்ருர்கள்: - * , "ஆண்டவனிடம் மனம் ஒன்றிப் பக்திப் பெருக்குடன் பிரார்த்தனை செய்வதினுல், நாட்டு மக்கள் ஈடுபடும் பட்சத்தில், நாட்டை அச்சுறுத்தும் சிக்கல்கள் ஒவ் வொன்ருகவும் படிப்படியாகவும் தீரும்; தீர்க்கப்பட்டு விடும்! அகந்தை, பேராசை, இறுமாப்பு, போன்ற கெட்ட குணங்கள் துளியுமின்றி, சுய நலம் கடந்த மனத்துடனும் பிரார்த்தனையில் நம்பிக்கையுடனும் மனித இனத்தின் மேன்மைக்காகப் பக்தி சிரத்தையுடன் அன்பாகப் பணி புரிந்தால், உலகம் உய்யும்!” சூடிக்கொடுத்த நாச்சியாரும் அன்னதான்! உலகில் மனிதகுலம் மேம்பாடு அடையும் வகையில் உலகில் அன்பும் சமாதானமும் நல்லிணக்கமும் பேணிப் பாதுகாக்கப்படவேண்டு மென்பதில் ஆர்வமும் அக்கறை யும் கொண்டு செயலாற்றிவரும் பாரதத்தின் பிரதமர் அண்மையில், 17-12-1983-ல் சாந்தி நிகேதனத்தில் நிகழ்ந்த குருதேவரின் விசுவபாரதிப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும், நாட்டை இன்னமும் அச்சுறுத்தி வரும் ஏழைமைப் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதில் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்தும் ஒன்றுபட்டும் செயலாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிரு.ர். - பாரதப் பிரதமர் இந்திராகாந்தி மாதிரியே, பாரதக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜயில் சிங்கும் நாட்டு மக்களின் நலன் மற்றும் சர்வதேச நாடுகளின் சமாதானத் தில் கவலையும் அக்கறையும் கொண்டு விளங்குகிரு.ர்.