பக்கம்:அன்னை தெரேசா.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ஆண்டவன் உலகத்தை மட்டுமல்ல, உலகத்து மனிதர் களையும்தான் படைக்கிருன்! ஆனால், மனிதர்களோ தங்களுக்குள்ளாக ஒருமை உணர்வுகளையும் நல்வினக்கச் சிந்தனைகளையும் பரஸ்பரம் வளர்த்துக் கொள்ளுவதற்குப் பதிலாக, தங்களிடையே வேற்றுமைப் படுத்தக்கூடிய உயர்வு தாழ்வுகளையும் மேடு பள்ளங்களையும் சமூகத்தின் பேராலும் நாகரிகத்தின் பெய ராலும் உருண்டோடிடும் பணத்தின் பேராலும் வளர்த்துக் கொண்டிருக்கிருtகள்! விளைவு : பூஜ்யம். எதிர்விளைவு : உலகத்தில் மக்கள் வாழ்கின்ற நாடு களிலும் நாடுகளுக்கு இடையிலும் பாசமும் நேசமும் குறைந்து, உலகத்திலே சோதனைகளும் பிரச்சினைகளும் நிறைந்து வழியத் தலைப்பட்டுவிட்டன. போர்களும் போராட்டங்களும் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டன. "அன்பின் வழியது உயிர்நிலை!’ என்று பாடிப் போந்தார் உலகப் பெரு ஞானி, அன்று! . ஆனால், உயிருக்கு நிலையான அன்பே சோதிக்கப்படு கிறது, இன்று! அன்பும் ஆண்டவனும் ஒன்று ஆயிற்றே? அன்பு சோதிக்கலாம்; சோதிக்கப் படலாகாது அல்லவா? ‘. . . ஆதலாலேதான், அந்த அன்பை வணங்கி வாழ்த்தவும், வாழ்த்தி வாழ வைக்கவும் உலகிடை அவ்வப்போது அன்பின் ஆர்வலர் களும் மனிதாபிமானிகளும் மானுடப் பண்பாளர்களும் தோன்றினர்கள். இந்நிலையிலேதான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/158&oldid=736297" இலிருந்து மீள்விக்கப்பட்டது