பக்கம்:அன்னை தெரேசா.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


அன்னையின் அன்பின் தூதுவர்களை அதே உலகம் என்றென் றைக்கும் வாழ்த்திக் கொண்டும் இருக்கும்! நோபல் பரிசு கிடைத்த செய்தி கிடைத்ததும், ஏழை களில் ஏழையாகி, ஏழைகளிலே ஏழைகட்கு அன்புப்பணி புரிந்து வரும் அன்னை தெரேசா வழக்கமான அமைதி யோடும் அன்போடும் இப்படிச் சொன்னர்கள்: ஒ!... உலகத்திலே ஏழைகள் இருப்பதை உலகம் இப்போது உணர ஆரம்பித்து விட்டது.” 1979, டிசம்பர் 10 ஆம் நாளில், உலகத்தின் அன்புத் தாயான தெரேசாவிற்குத் தங்கப் பதக்கத்தோடு வழங்கப் பட்ட ரூ 15,20,000 மதிப்புமிக்க நோபல் பரிசு அன்றைக்கே உலகத்து ஏழை மக்களின் அன்புச் சொத்தாக ஆயிற்று' 'அம்மா!... அம்மா!' உலகம் ஆனந்தக்கூத்து ஆடுகிறது! - - அன்பு உடையவர்கள் எல்லாம் உடையவர்கள் தாம்! "அன்னையே!' - ஐக்கிய நாடுகள் சபை அகமகிழ்வு அடைகிறது! - - உலகத்தின் நற்பணி மன்றங்கள் களிபேருவகை அடை கின்றன! அன்னையின் அன்பிலே- அன்பின் அமைதியில்அமைதியின் நம்பிக்கையிலே: பிறந்த மண்ணும் பெருமையடைந்தது. புகுந்த மண்ணும் பெருமையடைகிறது. அன்பே தெய்வம்!.