பக்கம்:அன்னை தெரேசா.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அனபு எனபது அருங்கனி; எல்லாப் பருவக்காலங் களிலும் கனியக்கூடியது. அரிதான மானிடர் ஆனவர் களில் யார் வேண்டுமானுலும், அற்புதமான இந்த அன்புப் பழத்தைப் பறித்துக் கொள்ளலாம்; அதிசயமான இக் கனியைக் கொய்திட வரம்பு இல்லை. முனைப்பான உள்ளொளி மிகுந்த வாழ்க்கையில், தியானம், பிரார்த்தனை மற்றும் தியாகம் போன்ற குணச் சிறப்புக்களின் மூலம் ஆண்டவனின் அன்பை ஒவ்வொருவரும் பெறமுடியும்! இறைவனிடம் அன்பு பாராட்டுவதைப்போலவே, மக்களே, குறிப்பாக, ஏழைஎளியவர்களை நாம் அன்பு பாராட்டி நேசிப்பதும் அவசியம். - அன்புப் பணிகளில் ஈடுபடும் சகோதரிகள் அல்லது, சகோதரர்கள் வீண் கருவமோ, தற்பெருமையோ கொள்ளக் கூடாது. நாம் மேற்கொண்டிருப்பது ஏழை நலப் பொதுச் சமூகப்பணி; இது தெய்வத் திருப்பணியுங் கூட. ஏழைகளும் பகவானின் குழந்தைகள் என்பதுதான் காரணம். ஆண்டவனின் எண்ணங்கள் உங்கள் மனங் களில் மலர்ச்சியடையும். தன் பணிக் கடன்களை உங்கள் அன்புக் கரங்களைக் கொண்டு செயலாற்றுவான் இறைவன். உங்களை வலுவடையச் செய்வதில் ஆண்டவன் உங்கட்குத் துணை இருக்கும்போது, நீங்களும் எல்லாம் வல்லதான உயர்சக்தியைப் பெற்றிடுவீர்கள்! ஆணகள, பெண்கள் மற்றும் குழந்தைகளிலே, ஏழை களுக்கும் அளுதைகளுக்கும் நம்பிக்கை இழந்து ஆதரவற்ற வர்களுக்கும் சமூகத்தினின்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் சமூகத் தால் வேண்டப்படாமல், கைவிடப்பட்டவர் களுக்கும் நாம் உதவி அன்பாக ஊழியம் செய்கையில், அவர்களோடு ஒன்றிக் கலந்து, உடல் சார்ந்த அவர்களது வறுமையையும் வெறுமையையும் பேர்க்குவதோடு, உள்ளம் சார்ந்த வெறுமையையும் வறுமையையும். செம்மைப்படுத்தி, அவர்களிடம் தெய்வத்தை அழைத்து.