பக்கம்:அன்னை தெரேசா.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 1984 காலக்கட்டத்தில் நிறுவ வேண்டுமென்பதும் அன்னையின் திட்டம். ஏழைகள் இருப்பார்களேயானல், சந்திரமண்டலத் துக்கும்கூட தாம் பயணம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவே அன்னை அகக்களிப்போடு ஒருமுறை தெரியப்படுத்த வில்லையா? தெய்வத்தைப் போல, அன்பு என்னும் தெய்வ மகா சக்தியும் எல்லாம் வல்லது. அன்பின் கொடுக்கல்-வாங்கல் கணக்கு ஒன்று: அன்னையின் அன்புப் பணிகளுக்கு ஊட்டம் அளிக்கும். நோக்கம் கொண்டு டென்மார்க்கில் இலட்சத்துக்கு மேற். பட்ட பள்ளிச் சிறுவர் சிறுமியர் தினமும் காலையில் பால் அருந்தாமல், பள்ளிக்குச் செல்கிரு.ர்கள். பல லட்சம் டாலர் மதிப்புடைய மருந்துகளையும் ஜீவசத்துள்ள பால் பவுடரையும் பெல்ஜியத்திலுள்ள நன்கொடையாளர்கள் தொடர்ந்து அனுப்பி வைக் கிரு.ர்கள். உலக அளவில் அன்பு ஊழியம் செய்து வரும் அன்னையை ஆதரிக்கும் கானடா நாட்டுச் செல்வந்தர்கள் தகவல் கிடைத்த ஏழு நாட்களுக்குள், எத்தியோப்பியா, தான்ஸ்ேனியா நாடுகளில் பஞ்சத்தால் அடிபட்ட மக்களுக்காக 5000 டன் அளவில் பதப்படுத்தப்பட்ட உயர் ரக உணவு வகைகளைக் கப்பலேற்றி அனுப்பிவைத்தார்கள். காரணம் : அன்பு. காரியம் : தொலைக்காட்சியில் அன்னையின் பேட்டி. ஒளிபரப்பு + ஒலிபரப்பு. நேரம்: இரவு 9.25 நாள்: நவம்பர் 16, 1982.