பக்கம்:அன்னை தெரேசா.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 Digest), “gába sivu: Ggl -ll- ofësh” (The Illustrated Weekly) போன்ற தினசரி, வார, மாத ஏடுகளும் கல்கத்தாவின் நாளிதழ் ஸ்டேட்ஸ்மென்’ (Statesman) மற்றும் அம்ரித uggrff L Âifiárr” (The Amrita Bazaar Patrika) Guirsïrfo பத்திரிகைகளும் பயன்தரும் பழு மரமாக விளங்கி அன்புச்சேவை செய்யும் அன்பின் தாயைப் பற்றி அவ்வப்போது தகவல் விவரங்களை வெளிப்படுத்தின மதம், இனம், மொழி கடந்த அன்னையின் திருப்பணிகளைத் தமிழ்கூறு நல்லுலகுக்குத் தெள்ளுதமிழிலே தெளியப் படுத்துவதில் கல்கண்டு, குமுதம், கல்கி ஆனந்த விகடன், தினத்தந்தி, தினகரன், மக்கள் குரல், முரசொலி போன்ற ஏடுகளும் பங்குப் பணி ஏற்கும்! தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் தகைமை யாளர்களால் உலகம் வாழ்கிறது. அன்பென்று முரசு கொட்டச் சொன்ன தேசியக்கவி * மக்கள் அத்தனை பேரும் நிகராம் என்றும் சொன்ஞர். மக்கள் யாவரையும் சரி நிகர் சமானமாக வாழச் செய்ய வேண்டும் என்பதுதான் அன்பின் தவம். அன்பின் வளர்ச்சிப் பணிகளில் அன்னையின் வரலாறு முப்பத்திரண்டுக்கும் மேலான ஆண்டுகளைச் சந்தித்திருக், கிறது. அன்பின் இயக்கத்தில் பி ர தா ன ம் பெற்று இயங்குகிற - பரிசுத்தச் சகோதரிகள் கற்பு, கீழ்ப்படிதல், எளிமை, அன்புசெய்தல் முதலான இயக்கத்தின் வாக்குறுதி விதிமுறைகளை ஏற்றுச் செயலாற்றுகின்றனர். மூன்று வெண்ணிற ஆடைகள் - முழுக்கைச் சட்டைகள், துணிப்பை, நற்செய்திப் புத்தகம், செபம் செய்வதற்கான புத்தகமாலை, மலிவான காலணிகள் இரண்டு, ஒரு படுக்கை, வாளி போன்ற சாதனங்கள் தாம் அவர் களுக்குரிய உடைமைகளாக அமையும். அதிகாலையில் நான்குமணி அளவில் ஆரம்பமாகும் பணிகள் இரவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/168&oldid=736308" இலிருந்து மீள்விக்கப்பட்டது