பக்கம்:அன்னை தெரேசா.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 அன்னே கேட்டுக் கொண்டதற்குப் பணிந்து, அன்னையின் அாழ்க்கை வரலாற்றைத் தொடாமல், அன்னையின் அன்பையும் அன்புப் பணியையும் தொட்டு எழுதி வெளி யிட்ட மேற்கண்ட நூல் அன்னைக்கு இஷ்டமானதாகவும் அமைந்தது! உலகத்தின் ஒருங்கிணைந்த அன்புக்குப் பாத்திரமாகி விட்ட அன்னையின் அன்புச் சேவகச்சபை, உலகளாவிய, கிறிஸ்துவ மதத்தின் கடுமையான கொள்கை-கோட்பாடு களின் அடிப்படை ஆதாரத்தில் இயங்குவதும், இயக்கப் படுவதும் யதார்த்தமான நடப்புத்தான்! - ஆலுைம், அன்னேயின் அன்பின் தாதுப்பணிகள், மதச் சார்பற்றன. வாகவும் உலகியல் பொதுமை நலப் பண்பின் சார்புடை யனவாகவும் இயங்கி வருகின்றன. அன்னைக்கு எம்மதமும் ச ம் ம த ம் த ன்! - இங்கே, ஆண்டவனுக்காகவே, ஆண்டவனின் குழந்தைகளான மக்கள் அன்பு பாராட்டப் படுகிருர்கள். அன்னையின் அன்புத் தொண்டு, வெறும் சமுதாயத் தொண்டு அல்லவே! - தெய்வத் திருத் தொண்டு அல்லவா? மற்றுமோர் உண்மை நிலையையும் அறிவிக்கும் "அன்பின் தூதுவர்கள் நிறுவனம்; அது மதச்சார்பின் கட்டுக்கோப்புடனும் கட்டுப்பாடுகளுடனும் இயங்கி, வருகின்றதன் நல் விளைவாகவேதான், அங்கே காரணமற்ற செலவினங்கள் காரணத்துடன் பெருமளவில் குறைகின்றன; குறைக்கப்படுகின்றன. இந்த அன்பியக்கத்தைச் சார்ந்த அமைப்புக்கள் எல்லாவற்றிற்கும் ஆகக்கூடிய கூடுதல் செலவில் 2 சதவீத அளவிற்குக் கூடுதலாக எந்தவொரு கிளே நிறுவனத்தின் செலவும் ஆவது கிடையாது. - அன்னே இல்லத்தின் முகப்பு மண்டபத்தில் மாத்திரம் ஒரேயொரு மின்விசிறி மாத்திரம் மேலே சுற்றிக் கொண்டிருக்கும்!