பக்கம்:அன்னை தெரேசா.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பங்களாதேஷ்’ உருவாவதற்கும் உருவாக்கப் படுவதற்கும் முன்னே நடந்த போரிலே சிக்கித் தவித்த எண்ணிலடங்காத மக்கள் கதியற்ற நிலையில் இந்திய மண்ணேத் தஞ்சமடைந்து, கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த போது, அவர்களுக்கெல்லாம் தயையோடும் தாட்சண்யத் தோடும் புகலிடம் தந்து, தமது அறப்பணி அமைப்பை அந்த அகதிகளின் அன்புச் சரணுலயமாக ஆக்கித் தந்தவர் அன்னை தெரேசாவே அல்லவா? அன்றைக்கு இந்து-முஸ்லிம் ஒருமைப்பாட்டுக்காகத் தேசத் தந்தை கொண்டு செலுத்திய நவகாளி யாத் திரையையும் அப்போது அன்னே உலகிற்கு நினைவூட்டி யிருக்கவேண்டும். கல்கத்தாவில் கீழ் வளைவுச் சாலேயில் நிறுவப்பட்ட சிசுபவனம் என்னும் குழந்தைகள் காப்பகம், பதினறு ஆண்டுகளைத் தாண்டியபின் புதியதொரு குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்தப்படவும் ஏதுவாக அமைந்தது. அப்போதுதான், கிழக்கு வங்கப்போர் அகதிகளின் மறுவாழ்வுக்கான தருமப் பணிகளில் முழுமூச்சோடு அன்ன முனைந்திருந்தார். அச்சமயத்தில், பாரத நாட்டுக்கு வருகை தந்த செனட்டர் எட்வர்ட் கென்னடி-(Senator Edward Kennedy) -ஆமாம், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் அமரர் ஜான் கென்னடியின் அன்புச் சகோதரர்அன்னையின் அகதி முகாம்களே நேரில் சென்று பார்வை யிடவும் தேர்ந்தது. மனிதாபிமானம் நிரம்பிய அன்னையின் மனித குலச் சேவைகளை மெச்சி மகிழ்ந்த எட்வர்ட் கென்னடி, தாய்க் குலத் திலகமான அன்னையின் அன்புப் பணிகள் மேலும் சிறக்கவும் நிறக்கவும் ஊக்கமளிக்கும் வகையிலே, தமது தந்தையின் பெயரில் அமைக்கப் பட்டிருந்த ஜோசஃப் கென்னடி அறக் கொடை யின் மூலம் ஐயாயிரம் டாலர் வெகுமதியை அளித்துப் பெருமை தேடிக் கொண்டார். அந்நேரத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த