பக்கம்:அன்னை தெரேசா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளித்தேவனின் பேரொளி: அன்பின் வழியது உயிர்நிலை! உலகச் சிறப்புப் பெற்ற வள்ளுவத்தின் அருள்மொழி வாக்கில், அர்த்தமுள்ள இந்துமதம், அர்த்தத்தோடு அமைதி காண்கிறது. . உயிர்நிலைப்பட்ட அன்பின் வழித் தத்துவத்திலே’ அன்பிற்காகவே அன்பு செய்து காட்டிப் புனிதச் சிலுவையில் வாழ்ந்து காட்டும் ஏசுபிரான் அன்போடு முறுவல் பூக்கிருர்; பிறை ஒளியாம் நபிகள் நாயகம் பீடுயர் பெருமை பெறுகிருர்; போதிப் புத்தர் ஆன்ம நிறைவு அடைகிருர்; சுதந் தரதேவியின் புண்ணிய சீலரான அண்ணல் காந்தி அடிகளின் தவம் பலிக்கிறது! எங்கும் ஒர்பொருள் ஆனது தெய்வம்!” பாரதித் தத்துவம் இது. அத்தெய்வம் தான் அன்பு. அன்புடையோர் என்பும் உரியர் பிறர்க்கு: முப்பால் தலைவனின் அன்பு உடைமையின் விதி இது அன்பை வாழ்வாகவும், வாழ்வைத் தொண்டாகவும், வாழ்வின் தொண்டினை வாழ்வின் தொழிலாகவும், அத் தொழிலைத் தவமாகவும், தவத்தையே நன்னம்பிக்கை யாகவும், அந்த நன்னம்பிக்கையையே இறை பக்தியாகவும் பற்றியும், பின்பற்றியும் மனித இனப் பொதுச் சமய அமைதி காண உயிர் வாழ்ந்து, பொதுமக்களின் நலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/34&oldid=736344" இலிருந்து மீள்விக்கப்பட்டது