பக்கம்:அன்னை தெரேசா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 அன்னை ஹல்க்ளி மதலையாகத் தவழ, பேசாத பொற் சித்திரத்தைப் பேச வைத்துக் கொண்டிருந்த கல்கத்தா நகரம், வா, மகளே! வா, வா!' என்று தேசக் கரம் நீட்டி அன்புடனும் பரிவுடனும் பாசத்துடனும் கன்னித் துறவி அக்னெளை வரவேற்றது. அந்த நாள்!... அக்னெலைப் பொறுத்த அளவில், அளவிட முடியாத அமைதியையும் ஆனந்தத்தையும் அவருக்கு அளித்த ஒரு புதுநாள் அது; பூம்புனல் வெள்ளமாகப் பக்தி பெருக் கெடுத்து ஒடிய அவளுடைய கன்னி உள்ளத்தில் கொலு வீற்றிருந்த தெய்வத் தந்தையின் முதல் அழைப்பை ஏற்று, தியாகத்தையே தன்னுடைய வாழ்க்கைத் தொழிலாகவும் ஏற்று, மக்கள் நன்மைப் பொதுத் தொண்டில் தான் விரும்பிய வண்ணம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் மகத்தான அப்பணி முறைகளுக்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளவும் மனப் பக்குவமும் மனத்தின்மையும் பெற்றவராக, இதோ, கல்கத்தாப் பெருநகரை மிதித்து விட்டார் அக்னெஸ்! அன்னை துர்க்கையும் ஆனந்தம் பொங்க. அருள் பொங்க வாழ்த்தினுள்! - தொடங்கியது புது வாழ்வு! அது, தியாகத்தின் வாழ்வு! அன்பின் வாழ்வும் அதுவே! ஆண்டவன் கட்டளே பிறப் பித்துக் காட்டிய தேவ வழியில்-கீதை வழியில், மனு தர்ம வழியில் மலர்ந்த அருமைத் தியாகத்தின் அற்புதமான வாழ்வு ஆயிற்றே அது!- இந்தியநாட்டில் கல்கத்தா நகரத்தில் பொதுநலச்சேவை செய்துவந்த லொரெட்டோ மடத்துக் கிறிஸ்தவப் பெண் துறவியர் குழுவில் சேர விரும்புவதாக ஓர் இளங்காலப் பொழுதில் அக்னெஸ் தன் தாய் தந்தையிடம் விருப்பம் தெரிவித்த நேரத்தில் தன்னுடைய அழகான வதனத்திலும் அன்பு ஊறிய கண் அ. தெ. 3 - *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/41&oldid=736352" இலிருந்து மீள்விக்கப்பட்டது